Published:Updated:

மணிரத்னம் படத்தில் நயன்தாரா?

மணிரத்னம் படத்தில் நயன்தாரா?
மணிரத்னம் படத்தில் நயன்தாரா?

மணிரத்னம் படத்தில் நயன்தாரா?

 தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படும் நயன்தாராவால் இன்னும் சில முக்கிய இயக்குநர்கள் நடிகர்களின் படத்தில் நடிக்க முடியாமலேயே இருக்கிறது. கௌதம் மேனன், பாலா, ஷங்கர் பட வாய்ப்பு கிடைத்தாலும் அதுவும் ஒரு பாடல் மட்டுமே, அடுத்து மணிரத்னம். நடிகர்கள் எனில் கமல், விக்ரம் இவர்களுடன் இன்னமும் நயன்தாரா இணைந்து பணியாற்று கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும்.

தற்போது புதிய செய்தியாக மணிரத்னம் இயக்க உள்ள புதிய படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு ராவணன் படத்தின் பிரியாமணி கேரக்டரில் நடிக்க நயனிடம் கேட்கப்பட்டது . அப்போது அந்த கேரக்டரில் தனக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என அதை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. 

மணிரத்னம் படத்தில் நயன்தாரா?

தற்போது துல்கர் சல்மான், கார்த்தி நடிக்க இருக்கும் இப்படத்தில் இணைந்து நடிக்க மெட்ராஸ் டாக்கீஸ் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. நயன்தாராவும் இதற்கு ஓகே சொல்லிவிட்டார் என்கிறார்கள். தற்சமயம் கார்த்தியுடன் ’கஷ்மோரா’, விஜய் சேதுபதியுடன் ’நானும் ரவுடிதான்’, ஜெயம் ரவியுடன் ’தனி ஒருவன்’ ஆகிய படங்களில் பிசியாக இருக்கும் நயனுக்கு ’மாயா’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 

அடுத்த கட்டுரைக்கு