Published:Updated:

அஞ்சலியின் சந்தோசம் நீடிக்கவில்லை

 அஞ்சலியின் சந்தோசம் நீடிக்கவில்லை
அஞ்சலியின் சந்தோசம் நீடிக்கவில்லை

அஞ்சலியின் சந்தோசம் நீடிக்கவில்லை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீண்டஇடைவெளிக்குப் பிறகு அஞ்சலி நடித்த இரண்டு தமிழ்ப்படங்கள் ஜூலை 31 அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் அவற்றில் ஒருபடத்தின் வெளியீடு தள்ளிப்போய்விட்டதாம்.

 அஞ்சலியின் சந்தோசம் நீடிக்கவில்லை

சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவியுடன் அஞ்சலி நடித்திருக்கும் சகலகலாவல்லவன் மற்றும் விமலுடன் ஜோடி சேர்ந்திருக்கும் மாப்பிள்ளைசிங்கம் ஆகிய இரண்டுபடங்களும் ஜூலை 31 அன்று வெளியாகிறது என்று சந்தோசமாக அஞ்சலியே டிவிட் செய்திருந்தார். அவர் சொல்லி முடித்து ஒருநாள் கூட ஆகவில்லை அதற்குள் அவருடைய ஆசை நிராசையாகிவிட்டது என்று சொல்லப்படுகிறது.

ஜூலை 31 அன்று சகலகலாவல்லவன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளைசிங்கம் படவெளியீடு தள்ளிப்போகிறதென்று சொல்கிறார்கள். ஒருபடத்தை எடுப்பது மட்டுமின்றி அதை எப்போது வெளியிடுவது என்பதிலும் அப்படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது என்று சொல்வார்கள்.

அதனால் சரியான தருணம் பார்த்து மாப்பிள்ளைசிங்கம் படத்தை வெளியிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தவிசயம் தெரியாமல் ஒரேநாளில் இரண்டுபடங்கள் என்று டிவிட் செய்துவிட்டார் அஞ்சலி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு