Published:Updated:

ஜெய்யை புகழ்ந்து தள்ளும் புகழ் பட நாயகி சுரபி!

ஜெய்யை புகழ்ந்து தள்ளும் புகழ் பட நாயகி சுரபி!
ஜெய்யை புகழ்ந்து தள்ளும் புகழ் பட நாயகி சுரபி!

ஜெய்யை புகழ்ந்து தள்ளும் புகழ் பட நாயகி சுரபி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரொமாண்டிக், எமோஷனல், ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ஜெய் நடிக்கும் “புகழ்”. இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி படங்களின் நடித்த சுரபி நாயகியாக நடிக்க, உதயம் NH4 படத்தின் மூலம் அறிமுகமான மணிமாறன் இப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் டிரெய்லர் வரும் 23ம் தேதி வெளியாகவிருக்கிறது.

ஜெய்யை புகழ்ந்து தள்ளும் புகழ் பட நாயகி சுரபி!

சுரபி பெரும் எதிர்பார்ப்புடன் நடித்துவரும் புகழ் படத்தில் இவரின் கதாப்பாத்திரத்தின் பெயர் புவனா. படத்தைப் பற்றி அவர் கூறும்போது, “ நான் நிஜ வாழ்வில் இருப்பது போன்று மனதில் உள்ளதை உள்ளபடி எதையும் மறைக்காமல் கூறும் ஓர் கதாப்பாத்திரமே இப்படத்தில் எனக்கு அமைந்திருக்கிறது. அதனாலோ என்னவோ இந்தக் கதாப்பாத்திரம் என் மனதுக்கு பிடித்து போக உடனே நடிக்கவும் ஓகே சொல்லிவிட்டேன்.

இப்படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடிப்பது செம்ம த்ரில். எந்தக் காரியத்தில் ஈடுப்பட்டாலும் அதில் வெற்றிப் பெற முழு முயற்சி எடுக்க வேண்டும் என தீவிரமாக நம்புபவர். கார் ரேசிங்கில் பெருத்த ஈடுபாடுக் கொண்ட ஜெய் ‘தல’ அஜித் போன்று பல போட்டிகள் வென்று புகழ்பெற வாழ்த்துகிறேன்.

“இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் நடித்ததும், ஒளிபதிவாளர் வேல்ராஜ் சாருடன் மீண்டும் இணைவதும் . மணிமாறன் சுவராசியமான காட்சிகளை பதட்டமில்லாமல் படமாக்க கூடியவர். இவரது இயக்கத்தில் வேலையை செய்ததுதான் எனக்கு இயக்குனர் ராம் கோபால் வர்மாவின்' 'அட்டாக்' படத்தில் நடிப்பதற்கு ஒரு பயிற்சியாக இருந்தது

“ ‘அட்டாக்’ படத்தில் நான் ஒரு பைக் மெக்கானிக் ரோலில் நடிக்கிறேன். நிஜ வாழ்வில் இப்படி ஒருவரை நான் சந்தித்து இல்லை, ஆகவே இந்த ரோல் எனக்கு சவாலாகவே இருந்தது என்கிறார் சுரபி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு