Published:Updated:

இறந்தும் வாழ்பவர்கள்: ஆதரவற்றவர்களுக்கு உயில் எழுதச்சொன்ன 5 திரைப் பிரபலங்களின் கதை!

புனித் ராஜ்குமார்

பணம், அதிகாரம் என பலவும் பயனற்றுப்போன பொழுதில், மனிதம் மட்டுமே ஆறுதலளித்தன. நோய்மையும், பேரிடர்களும் இதை நமக்கு உணர்த்திச் செல்கின்றன. முகம் தெரியாதவர்கள், ஆதரவற்றவர்கள் என பலரும் உதவிவருகின்றனர்.

இறந்தும் வாழ்பவர்கள்: ஆதரவற்றவர்களுக்கு உயில் எழுதச்சொன்ன 5 திரைப் பிரபலங்களின் கதை!

பணம், அதிகாரம் என பலவும் பயனற்றுப்போன பொழுதில், மனிதம் மட்டுமே ஆறுதலளித்தன. நோய்மையும், பேரிடர்களும் இதை நமக்கு உணர்த்திச் செல்கின்றன. முகம் தெரியாதவர்கள், ஆதரவற்றவர்கள் என பலரும் உதவிவருகின்றனர்.

Published:Updated:
புனித் ராஜ்குமார்

பேரிடர்கள் நம்மிடையே பல கேள்விகளை எழுப்பும். அப்போது வங்கிக் கணக்கில் நிறைந்திருக்கும் பணம், சொத்துகள், அவற்றின் மதிப்புகள் எல்லாமும் கேள்விக்குறியாகிப் போகும். உதாரணத்துக்கு கொரோனா முதல் அலையின்போது பணம் என்பது பொருளற்றதாகிப் போனதை நாம் கண்கூடாகப் பார்த்தோம். உதவுவதற்காக நீண்ட முன்கள பணியாளர்களின் உதவிக்கரம் மட்டுமே நமக்கு ஆசுவாசம் அளித்தன. பணம், அதிகாரம் என பலவும் பயனற்றுப்போன பொழுதில், மனிதம் மட்டுமே ஆறுதலளித்தன. நோய்மையும், பேரிடர்களும் இதை நமக்கு உணர்த்திச் செல்கின்றன. பலரும் முகம் தெரியாத பலருக்கு உதவிவருகின்றனர்.

இறப்பிற்குப் பிறகு தங்கள் வாழ்க்கை முழுவதும் சேர்த்து வைத்த சொத்துக்கள், எளிய மக்களின், ஆதரவற்றவர்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்க வேண்டும் என விரும்புவதற்கு எத்தனை பெரிய மனது வேண்டும். அப்படி விரும்பிய 5 பிரபலங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமார்
புனித் ராஜ்குமார்

புனித் வாழ்ந்த காலத்திலேயே 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 பசு காப்பகங்கள், கன்னட மொழிவழி பள்ளிகள், ஆயிரக்கணக்கான மாணவர்கள், எளிய மக்கள் என உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருந்தார். தனது தந்தை, தாயைப் போலவே இறந்த பிறகு கண்களைத் தானமாக வழங்க ஒப்புக் கொண்டிருந்தார். புனித் செய்துவந்த பணிகள் தொடர்வது உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்திருத்திருக்கிறார் நடிகர் விஷால். புனித்தின் தந்தை டாக்டர் ராஜ்குமார் பெயரால் பொதுநல சேரிட்டி அமைப்பு ஒன்று முன்பிருந்தே செயல்பட்டு வருகிறது.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங்

இவரின் மரணம் பலரையும் உலுக்கியது. பாலிவுட்டின் வாரிசு அரசியல் மூவி மாபியா உள்ளிட்டவை பற்றி பலரையும் கேள்வி எழுப்பச் செய்தது. மர்மமான இந்த உயிரிழப்புக்குப் பிறகு சுஷாந்த் குறித்து பலரும் அறியாத விஷயங்கள் வெளியே வந்தன. சுஷாந்தின் குடும்பம் அவரது சொத்துக்களைப் பொதுநலனுக்காக வழங்க இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சுஷாந்த் சிறிய வயதில் விளையாடிய பாட்னாவில் இருக்கும் வீட்டை அவரது நினைவு இல்லமாக மாற்றவுள்ளதாகவும் தெரிகிறது. அங்கு சுஷாந்த் பயன்படுத்திய பொருட்கள், அவருடைய ஆயிரக்கணக்கான புத்தகங்கள், Flight Simulator உள்ளிட்டவற்றை காட்சிக்கு வைக்கவுள்ளனர்.

இர்பான் கான்
இர்பான் கான்

இர்பான் கான்

பாலிவிட்டின் சிறந்த நடிகர்களுள் ஒருவர். 2020ல் கேன்சரோடு போரிட்டு இறந்தார். அவரின் மனைவி, இர்பானின் இறுதி சடங்குகளுக்குப் பிறகு அவருக்கு சொந்தமான சொத்துக்களில் இருந்து பெரும் பகுதி பொதுநலனுக்காக நன்கொடையாக வழங்க உள்ளதாக தெரிவித்தார். இர்பானின் விருப்பமும் அது எனத் தெரிவித்தனர். கோடிக்கணக்கான ரூபாய் சேரிட்டிக்காக இர்பான் சார்பில் சேரிட்டிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர்

இந்தியாவின் இசைக்குயிலாக ஒலித்துக்கொண்டிருந்த லதா மங்கேஷ்கர் விடைபெற்ற போது கோடிக்கணக்கான மக்கள் கண்ணீர் சிந்தினர். அவர்களின் நினைவில் எப்போதும் தங்கியிருக்கும் குரலாக லதா இங்கேயே இருந்துவிட்டார். அரசு மரியாதையோடு இறுதி சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. அவரது சொத்துக்கள் எளியோர்களின் பொது நலனுக்கென லதா மங்கேஷ்கர் உயில் எழுதி வைத்ததாகச் வட இந்திய சேனல்களிள் செய்திகள் தெரிவிக்கின்றன.

சித்தார்த் சுக்லா

சித்தார்த் சுக்லா
சித்தார்த் சுக்லா

பாலிவுட் நட்சத்திரம், மாடல், சின்னத்திரை நடிகர் எனப் பல பரிணாமங்களைக் கொண்டவர். பெண் ரசிகர்களின் பேவரைட். ஹிந்தி பிக்பாஸ் 13-வது சீசன் டைட்டில் வின்னர். எதிர்பாராதவிதமாக 2021 செப்டம்பரில் மாரடைப்பால் இறந்தார். இவரின் சொத்து மதிப்பே ரூ. 50 கோடி இருக்கும் என்கின்றனர். சித்தார்த் தன்னுடைய வாழ்க்கைக்குப் பிறகு தன் சொத்துக்களை எல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க விருப்பட்டதாக, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.