Published:Updated:

சரத்குமார் விஷால் போட்டியால் பலனடைந்த பரவை முனியம்மா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சரத்குமார் விஷால் போட்டியால் பலனடைந்த பரவை முனியம்மா!
சரத்குமார் விஷால் போட்டியால் பலனடைந்த பரவை முனியம்மா!

சரத்குமார் விஷால் போட்டியால் பலனடைந்த பரவை முனியம்மா!

’தூள் படத்தில் ‘மதுரை வீரன் தானே’ பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் படு ஃபேமஸ் ஆனவர் பரவை முனியம்மா , தொடர்ச்சியாக ‘சாணக்கியன்’, ‘தகதிமிதா’, ’வேங்கை’ ,’தோரணை’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்துவந்தார்.

மதுரையைச் சேர்ந்த நாட்டுப்புறப் பாடல் பாடும் இவர் சமீப நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருந்து வாங்கக் கூட வசதியின்றி கஷ்டத்தில் இருக்கிறாராம். மேலும் முதியோர் உதவித் தொகைக்கு அரசை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் சரத்குமார் ரூபாய் 25 ஆயிரம் கொடுத்து உதவி செய்துள்ளார். 

சரத்குமார் விஷால் போட்டியால் பலனடைந்த பரவை முனியம்மா!

அதே போல் விஷாலும் பரவை முனியம்மாவிற்கு பண உதவி செய்துள்ளார். எனினும் அவ்ர் கஷடப்படுவதாக சொல்லிப் பல நாட்கள் கழித்து இப்போது நடிகர் சங்க தேர்தல் நெருங்குகிற வேளையில் ஆர்வமாக இவர்கள் உதவி செய்கிறார்கள் என பலரும் கிசுகிசுக்கத் துவங்கிவிட்டார்கள். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு