Published:Updated:

மிஸ்டர் மியாவ்: விட்டுக் கொடுத்த சசி!

மிஸ்டர் மியாவ்: விட்டுக் கொடுத்த சசி!

மிஸ்டர் மியாவ்: விட்டுக் கொடுத்த சசி!

மிஸ்டர் மியாவ்: விட்டுக் கொடுத்த சசி!

Published:Updated:
மிஸ்டர் மியாவ்:  விட்டுக் கொடுத்த சசி!
விட்டுக் கொடுத்த சசி!
மிஸ்டர் மியாவ்:  விட்டுக் கொடுத்த சசி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டால், ரிலீஸாகி ஜெயிக்கும் வரை படுடென்ஷனோடு இருப்பது ரஜினியின் வழக்கம். ஆனால், அந்தப் பழக்கத்துக்கு மாறாக 'எந்திரன்' படத்தில் படுரிலாக்ஸ்டாக எல்லோரிடம் கிண்டலடித்து ஜாலியாக இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார். 'எந்திரன்' பட யூனிட்டாரிடம் கேட்டோம். ''கிட்டத்தட்ட ஸ்டுடியோ லெவலுக்கே கட்டடம் எழுப்பி, குளுகுளு ஏ.சி. வசதியுடன் யார் தொல்லையும் இல்லாமல் சென்னை புறநகரில் ஷ¨ட்டிங் தொடர்கிறது. படம் எண்பத்தைந்து சதவிகிதம் முடிந்து விட்டது. முன்னேறுகிற விதம் பார்த்து ரஜினியின் முகத் தில் அலாதியான சந்தோஷம். தனக்கு நெருக்கமானவர்களிடம் எல்லாம், 'என்னோட பழைய படங்களின் வசூல் ரெக்கார்டை எல்லாம் 'எந்திரன்' சுக்குநூறாக உடைத்து எறிந்துவிடும்!' என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்!'' என்று ஆரூடம் கணிக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்:  விட்டுக் கொடுத்த சசி!

அருண்விஜய் ஹீரோவாக நடித்து ஓடிக் கொண்டிருக் கிறது 'மலை மலை' படம். அந்தப் படத்தை தயாரித்த அருண், மாமனாருக்கு சொந்த ஊர் திண்டுக்கல். அங்கு, 'பிக் சினிமா' தியேட்டர் காம்ப்ளெக்ஸில் இருக்கும் இரண்டு தியேட்டர்களில் 'மலை மலை' படமும், 'நாடோடிகள்' படமும் ஓடிக்கொண்டிருந்தது. தமிழ்நாடு முழுக்கத் திரையரங்குகளில் பிரசன்னமாகி வந்த அருண், சமீபத் தில் திண்டுக்கல்லுக்கு விசிட் அடித்தார். அவர் வந்த நேரம் 'மலை

மலை' ஓடிக்கொண்டிருந்த 'பிக் சினிமா'வின் ஒரு தியேட்டரில் சீலிங் இடிந்து விழுந்து விட்டதால் படக்காட்சியை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறார்கள். இதனால் அப்செட்டான பட யூனிட்டார் பளிச்சென்று, அதே காம்ப்ளெக்ஸில் இன்னொரு திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்த 'நாடோடிகள்' படத்தின் நாயகன் சசிகுமாருக்கு போன் போட்டு அந்த தியேட்டரில் ஒரே ஒரு காட்சி மட்டும் 'மலை மலை' படத்தை திரையிடலாமா... என்று அனுமதி கேட்டிருக்கிறார்கள். சசியும் சட்டென்று பர்மிஷன் கொடுக்க... அதன் பின்னர் ஆட்டோ ரிக்ஷாவில் மைக் கட்டி 'மலை மலை' படக்காட்சியை ஆரவாரமாக நடத்தி, ரசிகர்களுக்கு நட்சத்திர தரிசனம் கொடுத்துள்ளார், அருண்விஜய்.

சூர்யா, விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ள தமன்னா... இடையில் பரத்துடன் கைகோத்து 'கண்டேன் காதலை' படத்தில் டூயட் பாடுகிறார். இதனால் படுகுஷியாகக் காணப்படும் பரத், தன்னைப் பார்க்க வருபவர்களிடம், ''முன்னாடி ஒல்லியா இருப்பேன். என்கூட ஜோடியா நடிக்கிறவங்க எல்லாம் எனக்கு அக்கா மாதிரி இருப்பாங்க. ஆனா, இப்போ லேட்டாஸ்ட்டாக எனக்கு பெர்ஃபெக்ட்டான ஜோடி தமன்னாதான்!'' என்று தமன்னாவை உயிருள்ள வெண்ணெய் சிலையாக உருக வைத்திருக்கிறாராம்!

மிஸ்டர் மியாவ்:  விட்டுக் கொடுத்த சசி!

''அந்த விஷயத்துக்கு மட்டுமல்ல; எந்த விஷயத்துக்கும் ரெடி! வாய்ப்புகளை எப்படியாவது வாங்கி என் நடிப்புத் திறமையை நிரூபிப்பதுதான் இப்போதைக்கு முக்கியம்!'' என்று ப்ரியமாக தூது அனுப்புகிறாராம் விலைமதிப்பில்லா நாயகி.

மிஸ்டர் மியாவ்:  விட்டுக் கொடுத்த சசி!

அக்கரைச்சீமையில் வேர்ல்டு ஹீரோ படத்தின் விற்பனையைவிட மது நடிகர் படம் டபுள்மடங்கு அதிகமாக விற்று விட்டதாம். இந்த பிசினஸ் செய்தி வேர்ல்டுக்கு தெரியவர... இப்படியும் ஒரு சூப்பர் போட்டியா என்று அசந்து நின்று விட்டாராம்!