Published:Updated:

”ரஜினி படத்தின் ஹீரோயினாக சர்ச்சை நாயகி ராதிகா அப்தே!

”ரஜினி படத்தின் ஹீரோயினாக சர்ச்சை நாயகி ராதிகா அப்தே!
”ரஜினி படத்தின் ஹீரோயினாக சர்ச்சை நாயகி ராதிகா அப்தே!

”ரஜினி படத்தின் ஹீரோயினாக சர்ச்சை நாயகி ராதிகா அப்தே!

 ரஞ்சித் படத்தின் ரஜினி நடிக்கிறார் என்பதே மிக ஆச்சர்யப்படுத்தும் விஷயமாக இருக்கும் வேளையில் தற்போது புதிய செய்தியாக படத்தில் நாயகி இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. 

படத்தில் ரஜினி வயதான தாதாவாக நடிக்கிறார் என தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் அதுவும் இல்லை என்ற நிலையில் தற்போது ஹீரோயின் இருக்கிறார் அவர் ராதிகா அப்தே என்பதுதான் மிக ஆச்சர்யம்.

”ரஜினி படத்தின் ஹீரோயினாக சர்ச்சை நாயகி ராதிகா அப்தே!

தமிழில் ‘அழகுராஜா’ படத்தில் மட்டும் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் தலை காட்டியவர் வட இந்திய படங்களில் சர்ச்சைகள்,. மற்றும் சர்ச்சையான பாத்திரங்களுக்கு பிரபலமானவரான ராதிகா ஆப்தே தான் படத்தின் நாயகி என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் பேசுகையில் ‘ஒருவழியாக நான் மிகப்பெரும் நடிகர் ரஜினியைப் பார்த்துவிட்டேன். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பு எனக் கூறியுள்ளார் ராதிகா. வட இந்திய தளம் ஒன்றில் வெளியிடப்பட்ட இந்த செய்தியை நடிகை ராதிகா ஆப்தே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

ராதிகா ஆப்தே சமீபத்தில் வெளியான ’ஹண்டர்’ என்ற அடல்ட்ஸ் ஒன்லி படத்திலும் , மேலும் ஹாலிவுட் குறும்படம் படமொன்றில் ஆடையின்றி நடித்ததாக சர்ச்சைகளில் சிக்கியவர். எனினும் பல சவாலான பாத்திரங்களை துணிந்து நடிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்திய ‘அகல்யா’ படம் இவர் நடித்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டும் பாராட்டப்பட்டும்  வருகிறது. 

ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி, நடிக்க இருக்கும் படத்திற்கு ‘காளி’ எனப் பெயரிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த கட்டுரைக்கு