Published:Updated:

பிரபுதேவா அண்ணன்! பிரகாஷ்ராஜ் தந்தை! நெகிழும் ஜெயம்ரவி!

பிரபுதேவா அண்ணன்! பிரகாஷ்ராஜ் தந்தை! நெகிழும் ஜெயம்ரவி!
பிரபுதேவா அண்ணன்! பிரகாஷ்ராஜ் தந்தை! நெகிழும் ஜெயம்ரவி!

பிரபுதேவா அண்ணன்! பிரகாஷ்ராஜ் தந்தை! நெகிழும் ஜெயம்ரவி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடனக் கலைஞராக இருந்து, நடிகராக மாறி, இயக்குநராக வளர்ந்துவிட்ட பிரபுதேவா அடுத்த கட்டமாக தயாரிப்பாளராக மாறியுள்ளார். “பிரபுதேவா ஸ்டூடியோஸ்” என்ற பட நிறுவனத்தை தொடங்கியிருக்கும் பிரபுதேவா ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் தயாரிக்கவிருக்கிறார்.

பிரபுதேவா அண்ணன்! பிரகாஷ்ராஜ் தந்தை! நெகிழும் ஜெயம்ரவி!

இயக்குநர் விஜய்யின் திங் பிக் ஸ்டூடியோஸ் சார்பில் அமலாபால் தயாரிக்கும் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நாயகனாக நடிக்கும் படத்தை, பிரபுதேவா இணைந்து தயாரிக்கவிருக்கிறார். இதைத் தொடர்ந்து ரோமியோ ஜூலியட் இயக்கிய லட்சுமணன் மீண்டும் ஜெயம்ரவியை வைத்து அடுத்த படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். அப்படத்தையும்,  ஐசரி கணேஷனின் மகன் வருண் நடிக்க விக்டர் இயக்கும் படத்தையும் பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

ஜெயம் ரவி மற்றும் வருண் நடிக்கும் இவ்விரு படங்களையும் தனியே பிரபுதேவா தயாரிக்க இரு படங்களுக்குமே டி.இமான் இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இவ்விழாவில் கலந்துகொண்ட ஜெயம்ரவி பேசும்போது, “ நான் பார்த்து வியந்து ரசிச்ச நபர் என்றால் அது பிரபுதேவா தான். யாரை வேண்டுமென்றாலும் நடிக்க அழைத்திருக்கலாம். அவர் கம்பெனியில் நடிக்க என்னைக் கூப்பிட்டதே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை.  பிரபுதேவா என்னிடம் அதிகப் பாசமாக இருப்பார். அவரை நடன மாஸ்டர் என்றோ இயக்குநர் என்றோ தோனாது. ஓர் அண்ணன் பீல் தான் வரும்.

பிரகாஷ் ராஜ் சார் என்னுடைய சினிமா தந்தைமட்டுமல்லாமல் எனக்கு தந்தையும் கூட. என்னை எப்போதுமே அறிவுரைகூடி வழிநடத்தக்கூடியவர். நான் வளரவேண்டும் என்று நினைக்கும் உண்மையான நபர் இவர் மட்டும் தான்.” என்றார் ஜெயம்ரவி.

பிரபுதேவா பேசும்போது, “ சந்தோஷம் நூறு மடங்கு இந்தாலும் பயமும் டென்ஷனும் 200 மடங்கிருக்கிறது. தயாரிப்பாளராவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். இந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்ச உடனே மனதுக்கு வந்தது ஜெயம் ரவி தான். அவருக்கு ராஜா கூட பிறந்த அண்ணனா இருக்கலாம். நான் கூடப் பிறக்காத அண்ணன்னு நினைக்கிறேன். என்னென்றே தெரியவில்லை. ஜெயம் ரவி என்றாலே பிடிக்கும்.” என்று கூறினார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு