Published:Updated:

விக்ரமுக்கு நெருக்கடி கொடுக்கிறதா தயாரிப்புநிறுவனம்?

 விக்ரமுக்கு நெருக்கடி கொடுக்கிறதா தயாரிப்புநிறுவனம்?
விக்ரமுக்கு நெருக்கடி கொடுக்கிறதா தயாரிப்புநிறுவனம்?

விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா ஆகியோர் நடித்துக்கொண்டிருக்கும் படம் பத்துஎண்றதுக்குள்ள. இந்தப்படத்தை இயக்குநர் முருகதாஸ் மற்றும் பாக்ஸ்ஸ்டார் நிறுவனம் ஆகியோர் சேர்ந்து தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 விக்ரமுக்கு நெருக்கடி கொடுக்கிறதா தயாரிப்புநிறுவனம்?

இந்தப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையவில்லையாம். இன்னும் பத்துநாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். இன்னும் சிலநாட்கள் கழித்துத்தான் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்குப் போகவிருக்கிறார்களாம்.

பத்துநாட்கள் படப்பிடிப்பு நடக்கும். எப்படியும் ஆகஸ்ட் இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும். இதுவரை படமாக்கப்பட்டவை எல்லாம் எடிட்டிங், டப்பிங் முடிந்து தயாராக இருக்கின்றன என்றும் கடைசியாகப் பத்துநாட்கள் எடுக்கும் காட்சிகளை எடிட் செய்தால் போதும் என்பதால் அக்டோபர் முதல்வாரத்தில் படம் தயாராகிவிடும் என்று கணக்குப் போட்டு ரிலீஸ்தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறதென்று சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இதற்குள் படத்தை முடித்துக்கொடுத்தே ஆகவேண்டும் என்கிற நெருக்கடியை இயக்குநருக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே தயாரிப்புநிறுவனத்துக்கும் நாயகன் விக்ரமுக்கும் ஒத்துப்போகவில்லை என்று சொல்லப்பட்டது. இப்போது நடக்கும் நிகழ்வு அதை உறுதிப்படுத்துவது போல் இருப்பதாகத் திரையுலகில் பேச்சு.