Published:Updated:

பள்ளிப்படிப்பை முடிக்காத ரஜினி, பள்ளிக்கே போகாத கமல் உள்ளிட்ட படிக்காத நடிகர்களின் சாதனைகள்

பள்ளிப்படிப்பை முடிக்காத ரஜினி, பள்ளிக்கே போகாத கமல் உள்ளிட்ட படிக்காத நடிகர்களின் சாதனைகள்
பள்ளிப்படிப்பை முடிக்காத ரஜினி, பள்ளிக்கே போகாத கமல் உள்ளிட்ட படிக்காத நடிகர்களின் சாதனைகள்

பாலிவுட் முதல் கோலிவுட் வரை சக்கைப்போடு போடும் பிரபல நட்சத்திரங்கள் பலர் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள். நடிகர்கள் பலர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினாலும். நடிகைகள், மாடலிங் துறையில் காலடி எடுத்துவைத்து அதன் தொடர்ச்சியாக அப்படியே நடிப்பு துறையில் பலர் நுழைந்தார்கள்.

இவர்களில் சிலர் இந்திய ரசிகர்களின் மனதை மட்டும் அல்லாது உலக ரசிகர்களையும் தங்களது நடிப்பால் ஈர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனி, பள்ளிப்படிப்போடு திரையுலகில் காலடி வைத்து சாதித்த இந்திய பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்...

ரஜினிகாந்த்:

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே நாடகங்களில் நடித்து, நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்தவர் ரஜினி. இவர் பி.யூ.சி (கல்லூரிக்கு முந்திய படிப்பு) படித்த பிறகு கூலியாகவும், கண்டக்டராகவும் பணியாற்றினார். பிறகு இவரது நண்பரின் உதவியோடு, கோலிவுட் வாசலில் காலடி எடுத்து வைத்தார் ரஜினி.

கமல்ஹாசன்:

பால் குடி மறவா வயதிலேயே வசனங்களை கரைத்துக் குடித்து, களத்தூர் கண்ணம்மா படத்தில் பட்டையை கிளப்பியவர் கமல்ஹாசன். இவர் படித்தது எல்லாம் சினிமா தான் .இவருக்கு தென்னிந்தியாவின் நான்கு முக்கிய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என சரளமாக பேச , எழுத தெரியும். மேலும் ஆங்கிலம், இந்தி, மராத்தியில் சரளமாக பேசுவார் . 

அஜித் குமார் :

1986ஆம் ஆண்டு பள்ளி படிப்பை பாதியில்விட்டு வந்தவர் அஜித். பள்ளி படிப்பை முழுமையாக முடிக்காவிட்டாலும் வாழ்க்கையை நன்கு படித்தவர். ஹெலிகாப்டர், விமானம் ஓட்ட லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே இந்திய நடிகர் ஏன் ஆசிய நடிகரும் அஜித்தான் என்கிறது புள்ளி விவரம். 

தனுஷ் :

திரையுலக குடும்ப பின்னணியில் வந்த காரணத்தினால் "துள்ளுவதோ இளமை." படத்தில் நடிப்பதற்காக பள்ளிப் படிப்போடு துறையுலகில் நுழைந்துவிட்டார். பிறகு காதல் கொண்டேன், திருடா திருடி என இவரது பயணம் இன்று வரை செம்மையாக சென்றுக் கொண்டிருக்கிறது.

சல்மான் கான் :

பெண்களின் மத்தியில் செம கிரேஸ் இவருக்கு இருக்கிறது. ஆனால், இவர் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். என்ன காரணம் என தெரியவில்லை என்றாலும் இந்தியின் 300 கோடி க்ளப்பில் இவரது படங்களுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு.

பள்ளிப்படிப்பை முடிக்காத ரஜினி, பள்ளிக்கே போகாத கமல் உள்ளிட்ட படிக்காத நடிகர்களின் சாதனைகள்

கரீஷ்மா கபூர் :

என்ன மாயமோ, மர்மமோ, பாலிவுட் நடிகைகள் பெரும்பாலும் தங்களது 16 வயதிலேயே பள்ளி படிப்பிற்கு முழுக்குப் போட்டுள்ளனர். இந்த பட்டியலில் கரிஷ்மாவும் அதே.. அதே வகை தான்.

கங்கனா ரனாவத்:

பள்ளியில் படிக்கும் போது, மிகவும் கடினமாக படிப்பாராம் கங்கனா. கிட்டத்தட்ட ஓர் நாளுக்கு 18 மணிநேரம் எல்லாம் இவர் படித்ததுண்டாம். ஆனால், அறிவியலின் மீது ஏற்பட்ட தகராறின் காரணமாக பள்ளி படிப்பை 16 வயதிலேயே விட்டுவிட்டார். இப்போது தேசிய விருது பெற்ற குயின் இவர் தான். 

கஜோல் :

கஜோலின் இளமை பருவத்திலேயே இவரது பெற்றோர் பிரிந்து சென்றுவிட்டனர். இதன் பிறகு இவர் தனது தாய் மற்றும் பாட்டியின் அரவணைப்பில் தான் வளர்ந்து வந்தார். 16 வயதில் ராகுல் என்பவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், பள்ளி படிப்பை விட்டு நடிப்பு துறைக்கு வந்துவிட்டார். இரண்டு குழந்தைகள் என வாழ்வில் செட்டிலான நிலையிலும் கஜோல் ஹீரோயினாக நடிக்க வேண்டுமென இப்பவும் வாசலில் படாதிபதிகள் காத்துக் கிடக்கிறார்கள். 

கத்ரீனா கைப் :

தனது 14வது வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்தவர் கத்ரீனா கைப். தனது முதல் மாடலிங் ஷூட்டிலேயே செம பிஸி நிலைக்கு சென்ற கத்ரீனா கைப் அதற்கு பிறகு முழுமையாக படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டார். பிறகு பாலிவுட்டில் மாபெரும் நாயகியாக மாறிய இவர் பல வருடங்களாக ஆசியாவின் செக்ஸியான பெண்மணி என்ற புகழோடு வாழ்ந்து வருகிறார்.

- மு.ஜெயராஜ் -

(மாணவப் பத்திரிக்கையாளர்)