Published:Updated:

புலி தமிழ்நாட்டுக் கதையில்லையா?

புலி தமிழ்நாட்டுக் கதையில்லையா?
புலி தமிழ்நாட்டுக் கதையில்லையா?

புலி தமிழ்நாட்டுக் கதையில்லையா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி , சுதீப், பிரபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘புலி’ படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத்.படம் செப்டம்பர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. 

இந்தப் படத்தின் டிரெய்லரில் கூட கதையை சரியான முறையில் கணிக்க முடியவில்லை , மேலும் கதை தெரிந்துவிடக்கூடாது என்பதில் படக்குழு கவனமாக இருப்பது கச்சிதமாக தெரிகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் காட்சிகள் தமிழ் சார்ந்தவைகளாக இல்லாமல் முற்றிலும் மேலை நாட்டு கலாச்சாரத்தில் உள்ளன.

முக்கியமாக ஸ்ரீதேவியின் உடைகள் ’நார்னியா’ படத்தின் ஒயிட் விட்ச் பாணியில் பெரிய வித்யாசமான கவுன்கள், பெரிய அளவிலான க்ரீடங்கள், தங்கம் நிறம் மட்டுமின்றி வேறு உலோகங்கள் கலவையிலும் உள்ளன. 

புலி தமிழ்நாட்டுக் கதையில்லையா?

அதே சமயம் விஜய் மற்றும் சுதீப்பின் உடைகளும் ஹாலிவுட் படங்களின் அரசர் கால தோற்றத்தையே காட்டுகிறது. ஹன்சிகா வரும் காட்சிகளில் அவரது உடைகள் இன்னும் கொஞ்சம் மாற்றமாகி அரேபிய கலாச்சாரத்தை காட்டுவது போல் அமைதிருப்பது மற்றொரு உதாரணம். 

இது தவிர்த்து கடைசியாக விஜய் ஒரு மிருகத்துடன் மோதும் காட்சி அது ஒரு கருப்பு நிற சிறுத்தை. கருப்பு நிற சிறுத்தைகள் ஆசியா கண்டத்தில் இருப்பினும் வெகுவாக காணப்படுவது ஆப்பிரிக்கக் காடுகளில் தான். மேலும் ஆசியாவில் காணப்பட்டாலும் இந்தியா அதன் சுற்றுவட்டாரங்களில் கிடையாது என்பதால் கண்டிப்பாக தமிழகத்திற்குச் சொந்தமான காட்சியாக அது இருக்க வாய்ப்பில்லை. 

இந்நிலையில் விஜய் பயன்படுத்தும் வாள் , காட்டப்படும் பிரேதசங்கள், சிலைகள் யாவும் ஹாலுவுட் படத்தின் சாயலே உள்ளன. நரேன் உள்ளிட்ட மக்கள் மட்டும் கொஞ்சம் இந்தியர்களுக்கான சாயலில் இருக்கிறார்கள். எனவே புலி தமிழ் சார்ந்தக் கதையா என்பதில் சந்தேகம் வலுத்துள்ளது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு