Published:Updated:

பாட்ஷா படத்துக்கும் அஜித் படத்துக்கும் என்ன வேறுபாடு?

பாட்ஷா படத்துக்கும் அஜித் படத்துக்கும் என்ன வேறுபாடு?
பாட்ஷா படத்துக்கும் அஜித் படத்துக்கும் என்ன வேறுபாடு?

பாட்ஷா படத்துக்கும் அஜித் படத்துக்கும் என்ன வேறுபாடு?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 சிறுத்தைசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அஜித்துக்கு டாக்சிடிரைவர் வேடம். அதோடு படத்தின் கதை சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடப்பதுபோல இருக்கிறது. ஒரிடத்தில் பெரிய ரவுடியாக இருக்கிறவர் இன்னொரு ஊருக்கு வந்து அமைதியாக வாழுகிறார் என்பதும் இந்தப்படத்தில் இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது.

இவற்றால் இந்தப்படம் ரஜினியின் பாட்ஷா போலவே இருக்கிறது என்றும் அந்தப்படத்தைத் திரும்ப எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இதுபற்றிப் படக்குழுவினர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் பாட்ஷா படத்துக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதால் அவர்கள் இந்தச்செய்திகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.

பாட்ஷா படத்துக்கும் அஜித் படத்துக்கும் என்ன வேறுபாடு?

அப்படி என்ன வேறுபாடு? என்றால், இந்தப்படத்தில் அஜித்தின் அன்புக்குரிய தங்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்று ஏற்படுகிறது. அந்த ஆபத்தை விளைவித்தவர்களுக்கு எதிராக அமைதியாக இருக்கும் அஜித் பொங்கி எழுகிறார் என்று சொல்கிறார்கள். தங்கைக்கு ஏற்படுகிற ஆபத்தில் வேறுபாடு இருக்கலாம் பாட்ஷாவிலும் தங்கைக்காகத்தானே ரஜினி மறுபடி பாட்ஷாவாகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு