Published:Updated:

இயக்குநர் லிங்குசாமியின் முதல் காதலி யார்? அவரே சொல்லும் சுவாரசிய தகவல்

இயக்குநர் லிங்குசாமியின் முதல் காதலி யார்? அவரே சொல்லும் சுவாரசிய தகவல்
இயக்குநர் லிங்குசாமியின் முதல் காதலி யார்? அவரே சொல்லும் சுவாரசிய தகவல்

இயக்குநர் லிங்குசாமியின் முதல் காதலி யார்? அவரே சொல்லும் சுவாரசிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நேற்று மாலை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நடந்த இலக்கிய வீதியின் அன்னம் விருது விழாவில் லிங்குசாமி பேசினார். பலரும் அவரது மைக்கில் பேசுவதை சமூக வலைகளில் கிண்டலடித்து வரும் நிலையில் லிங்குசாமி சுஜாதா குறித்து பேசிய விதம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நிகழ்வுக்குத் தலைமைவகித்த ம. ராசேந்திரன், எழுத்தாளர் சுஜாதா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அடுத்து “மறுவாசிப்பில் சுஜாதா” என்ற தலைப்பில் இயக்குநர் லிங்குசாமியின் பேச்சு ஆரம்பித்தது.

அவர் பேசுகையில் “ஆழமாக நான் சுஜாதாவைப் படிக்கவில்லை. மேலோட்டமாகத்தான் படித்தேன். அவர் எழுத்துக்கள் மீது எப்போதும் எனக்குப் பிரியம் உண்டு” என்று பேசத் தொடங்கினார். “சினிமாவில் இருப்பதால் மணிரத்னம் சார் என்றால் தனி மரியாதை. அதைப்போலத்தான் எழுத்தாளர்களில் சுஜாதா மீது தனி கிரேஸ்” என்றார். என் முதல் காதலியின் பெயரும் சுஜாதாதான். இந்த சுஜாதாவைப் பற்றித்தான் பேச நிறைய இருக்கு என்று சொன்னேன் என்றார்.

தீபாவளி மலர் ஒன்றில் வெளிவந்த ஓலப் பட்டாசு என்ற சிறுகதையை ஒரு திரைப்படத்திற்கான கதையை சொல்வதைப் போல விவரித்தார். பிறகு அதேபோல தன்னுடைய இளமைக்கால அனுபவம் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார். கதையுடன் அதனை ஒரு புள்ளியில் இணைத்துக்காட்டினார். கணையாழியின் கடைசிப்பக்கம் படித்து கவிதை எழுதத் தொடங்கியதில் இருந்து, சுஜாதாவை நேரில் பார்த்த அனுபவம், அவருடைய மிகச்சிறந்த கேள்வி பதில்கள் (எப்போது எழுதுவதை நிறுத்துவீர்கள் – இரவு 12 மணிக்கு), மறக்கமுடியாத வசனங்கள் (இந்த உலகில் எல்லா வழிகளும் குறுக்குவழிகளாக மாறிவிட்டன – எந்திரன்), சுஜாதா மறைந்தபோது அவரது மனைவி சுஜாதா மனந்திறந்து பேசியது என லிங்குசாமியின் பேச்சில் ஒரு உண்மையான வாசகனின் பேரன்பு காணப்பட்டது.

இயக்குநர் லிங்குசாமியின் முதல் காதலி யார்? அவரே சொல்லும் சுவாரசிய தகவல்

சுஜாதா பல நல்ல கவிதைகளை அடையாளம் காட்டியிருக்கிறார் என்று கூறிய லிங்குசாமி, தன்னுடைய “சலவைத் தொழிலாளியின் வயிற்றில் சுருக்கங்கள்” என்ற கவிதையை அவர் சுட்டிக்காட்டிய பிறகுதான் எல்லோரும் என்னை கவிஞனாகப் பார்த்தார்கள் என்றார். “குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் வானத்தையே அசைத்துப் பார்க்கிறான்” என்ற கவிதை அவர் கூறிய பின்னர்தான் பிரபலமாகத் தெரியவந்தது. எத்தனையோ கவிஞர்களை அடையாளம் காட்டியிருக்கிறார் சுஜாதா என்று குறிப்பிட்டார்.

கடைசியில், “இன்னும் நிறைய பேசவேண்டும். பேச வேண்டிய சொற்கள் என்னைத் துரத்திக்கொண்டே இருக்கும்” என்று கூறி முடித்தார். ஜிகினா படம் வெளியாகும் பரபரப்பான நேரத்தில் (வெள்ளிக்கிழமை) மாலையே சிறு இலக்கிய நிகழ்வுக்கு குறிப்புகள் எழுதி வந்து லிங்குசாமி பேசியது ஆச்சரியம் தான். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கவிஞர் ஜெயபாஸ்கரன், அவர் எழுதிய கவிதைகள் உள்பட பலரது சிறந்த கவிதை வரிகளைக் கூறி கலகலப்பூட்டினார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு