Published:Updated:

இதுவரை வெளியான தல56 படத் தலைப்புகள் தெரியுமா?

Vikatan Correspondent
இதுவரை வெளியான தல56 படத் தலைப்புகள் தெரியுமா?
இதுவரை வெளியான தல56 படத் தலைப்புகள் தெரியுமா?

 வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என செய்திகள் வெளியானதுதான் தாமதம். படத்தின் தலைப்பு இதுவாக இருக்கலாம் அதுவாக இருக்கலாம் என செய்திகள் பரவத் துவங்கின. இந்நிலையில் படத்தின் தலைப்புகள் என்னவாக இருக்கலாம் என இதுவரை சுற்றலில் இருந்த தலைப்புகளின் பட்டியல் இதோ

  • வரம்
  • வெட்டி விலாஸ்
  • அடங்காதவன்
  • ஆரவாரம்
  • சரவெடி
  • வேதாளம்

இப்படி பல தலைப்புகள் இதுவரை செய்திகளில் அடிப்படுள்ளன. இந்நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக நள்ளிரவு 12 மணிக்கு ஒரு வழியாக படத்தின் தலைப்பு வெளியாக இருக்கிறது. ஒருவேளை தலைப்பு இந்த லிஸ்டில் இருக்கலாம் அல்லது இந்த லிஸ்டில் இல்லாத வேறு ஒரு தலைப்பாகவும் இருக்கலாம் என்ற நிலையில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இதுவரை வெளியான தல56 படத் தலைப்புகள் தெரியுமா?

இந்நிலையில் இப்போதே ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில்  #AllSetForThala56TitleBlast என ட்ரெண்டை உருவாக்கிவிட்டனர்.  இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் பட்சத்தில் இன்னமும் இந்த டைட்டில் இதுவோ அதுவோ என்ற பரபரப்பு குறையவில்லை என்றே சொல்லவேண்டும்.