Published:Updated:

நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!

Vikatan Correspondent
நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!
நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!

சென்னை: நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீடு, சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகம், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, சாலிகிராமத்தில் உள்ள புலி பட இயக்குனர் சிம்புதேவன் அலுவலகம், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, மதுரை தெற்கு மாசி  வீதியில் உள்ள சினிமா பைனான்சியர் அன்பு செழியன், நாகர் கோவில் அஞ்சு கிராமத்தில் உள்ள புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வீட்டிலும் மற்றும் புலி படக் குழுவினர் இல்லங்கள், அலுவலகங்கள் என சென்னையில் 25 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!


மேலும் மதுரை, கொச்சி, ஹைதராபாத்தில் உள்ள இவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 32 இடங்களிலும்  ஒரே நேரத்தில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை விஜய் நடித்து வெளியாகவுள்ள புலி படமானது பெருமளவு பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது. கணக்கில் காட்டப்படாத பணத்திலேயே இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியை அடுத்தே இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.