Published:Updated:

மணிரத்னம் படம் தாமதமாவது எதனால்?

Vikatan Correspondent
 மணிரத்னம் படம் தாமதமாவது எதனால்?
மணிரத்னம் படம் தாமதமாவது எதனால்?

மணிரத்னம் இயக்கும் அடுத்தபடத்தில் துல்கர் நாயகன், கீர்த்திசுரேஷ் நாயகி  படம் தொடங்குவது தாமதமாகிறது என்று நிறைய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மணிரத்னம் அலுவலகத்தில் கேட்டபோது, எல்லாமே தப்பான செய்திகள் என்கிறார்கள்.

 மணிரத்னம் படம் தாமதமாவது எதனால்?

படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குவதாகத்தான் திட்டம். இன்னும் நடிகர்கள் முழுமையாக முடிவாகாததால் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். இப்போதைக்கு கார்த்தியும் நித்யாமேனனும் நடிப்பது உறுதியாகியிருக்கிறதாம்.

துல்கர் நடிப்பது பற்றி இன்னும் உறுதியாகவில்லை என்று சொல்லப்படுகிறது. அதுவும் தெரிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.