Published:Updated:

விஷால் அணியை கமல் தூண்டிவிடுகிறார்: சரத்குமார் பாய்ச்சல்

Vikatan Correspondent
விஷால் அணியை கமல் தூண்டிவிடுகிறார்: சரத்குமார் பாய்ச்சல்
விஷால் அணியை கமல் தூண்டிவிடுகிறார்: சரத்குமார் பாய்ச்சல்

சென்னை: நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினரை கமல்ஹாசன் தூண்டி விடுவதாக நடிகர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

விஷால் அணியை கமல் தூண்டிவிடுகிறார்: சரத்குமார் பாய்ச்சல்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ பட பிரச்னையில் இருந்து நடிகர் சங்கத்தை குற்றம் சாட்ட தொடங்கினர். ஆனால் ‘விஸ்வரூபம்’ படம் வெளிவர நடிகர் சங்க தலைவர் என்ற முறையில் நான் பெரும் முயற்சி எடுத்தேன்.

அதுபோல் ‘உத்தம வில்லன்’ படத்துக்கு பிரச்னை வந்தபோதும் நான் தலையிட்டு படம் வெளிவர ஏற்பாடு செய்தேன். ஆனால் அதற்காக கமல்ஹாசன் ஒரு நன்றி கூட எனக்கு தெரிவிக்கவில்லை. நன்றியை எதிர்பார்த்து நானும் அந்த காரியங்களை செய்யவில்லை. நடிகர் சங்க தேர்தலிலும் எதிர் அணியினரை கமல்ஹாசன்தான் தூண்டி விடுகிறார்" என்று குற்றம்சாட்டினார்.