Published:Updated:

விஷாலை சாதிப்பெயர் சொல்லி ராதிகா விமர்சனம் செய்தது சரியா?

விஷாலை சாதிப்பெயர் சொல்லி ராதிகா விமர்சனம் செய்தது சரியா?

விஷாலை சாதிப்பெயர் சொல்லி ராதிகா விமர்சனம் செய்தது சரியா?

விஷாலை சாதிப்பெயர் சொல்லி ராதிகா விமர்சனம் செய்தது சரியா?

விஷாலை சாதிப்பெயர் சொல்லி ராதிகா விமர்சனம் செய்தது சரியா?

Published:Updated:
விஷாலை சாதிப்பெயர் சொல்லி ராதிகா விமர்சனம் செய்தது சரியா?

நடிகர் சங்கத்தின் தேர்தல் விவகாரம் உச்சக்கட்ட மோதலாக உருவெடுத்துள்ளது. சரத்குமார் தரப்பும் விஷால் தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டே போகின்றன.

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சரத்குமார் தரப்பு நேற்று மீடியாவைச் சந்தித்தது. அதில் நடிகை ராதிகா பேசும்போது, நான் சரத்தின் மனைவியாக இங்கு வரவில்லை, நடிகர்சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் வந்திருக்கிறேன் என்றார். ஆனால் அவர் பேச்சு முழுக்க சரத்குமார் பற்றிய விமரிசனங்களுக்குப் பதிலளிப்பதாகவே இருந்தது.

விஷாலை சாதிப்பெயர் சொல்லி ராதிகா விமர்சனம் செய்தது சரியா?

அதோடு, நடிகர் விஷாலை பற்றிப் பேசும்போது, முதலில் விஷால் என்றவர் கொஞ்சம் இடைவெளிவிட்டு, 'விஷால் ரெட்டி' என்ற அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.  துபாயில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போதுதான் பிரச்னை தோன்றியது என்றவர், அப்போது. விஷால், சரத்குமாரைத் தரக்குறைவாகப் பேசினார் என்றும் அந்தநேரத்தில் அவர் நிதானமாக இல்லை என்றும் சொன்னார். விஷாலை ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று ராதிகா  அடையாளப்படுத்துவது ஏன் ? இங்கு தெரியவருவது ஒரு விஷயம்தான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை விஷால் எங்கிருந்து வந்தார், அவரது பின்புலம் என்ன, அவர் எந்தச் சமூகத்தைச் சார்ந்தவர் என்று யாரும் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. ஒரு நடிகர் நடிக்கிறார் அவ்வளவுதான்!

இதுவரை விஷால் தான் இந்தச் சமுகத்தைச் சார்ந்தவன் என்று அடையாளம் காட்டிக் கொண்டதாகவும் தெரியவில்லை.  விஷாலும் அருமையாக தமிழ் பேசுகிறார். மூச்சுக்கு முன்னூறு முறை சரத்குமார் தரப்பு நடிகர் சங்கத்தில் சாதி புகுந்து விட்டது, அரசியல் புகுந்து விட்டது என்று சொல்கிறது. ஆனால் இங்கு விஷாலை ரெட்டி என்று அழைப்பதன் மூலம் நடிகை ராதிகா எதனை அடையாளப்படுத்த முயற்சிக்கிறார்? 

இங்கு விஷாலை ரெட்டி என்று அழைக்கும் நடிகை ராதிகாவும் நாயுடு சாதியைச் சேர்ந்தவர்தானே என்கிற விமர்சனமும் வரத்தொடங்கிவிட்டது. விஷால் அணியினரால் சங்கத்துக்குள் சாதியும் அரசியலும் புகுந்துவிட்டது என்று சரத்குமார் அணியினர் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இதுவரை விஷால் அணியினர் யாரையும் சாதிப்பெயர் சொல்லிப் பேசியதாகத் தெரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விஷாலை சாதிப்பெயர் சொல்லி ராதிகா விமர்சனம் செய்தது சரியா?

இந்நிலையில் ராதிகா, இப்படிப் பேசியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது, தமிழ்நாட்டு நடிகர்சங்கத்தில் தெலுங்குக்காரருக்கு என்ன வேலை? என்று சொல்வது ராதிகாவின் நோக்கமாக இருக்குமானால், அந்த அணியினர் இன்னும் பல சிக்கல்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். தென்னிந்திய நடிகர்சங்கம் என்கிற பெயரை மாற்றி தமிழ்நாடு நடிகர்சங்கம் என்று மாற்றவேண்டும் என்கிற கோரிக்கையை சரத்குமார் நிராகரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் சங்கத்தில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. தலைவராக ராதிகாவின் கணவரும், செயலாளராக அவருடைய சகோதரரும் இருந்து வருகின்றனர்.  பிரச்னை என்று வந்துவிட்டது. தேர்தலில் நிற்பது உறுதி என்று விஷால் தரப்பினர் தெரிவித்து விட்டனர். தேர்தல் நடக்கட்டுமே. தேர்தலைத் தெம்பாக எதிர்கொள்வதை விட்டுவிட்டு, சாதிப்பெயர் சொல்லி விமர்சனம் செய்வது அவர்களுக்கு நன்மையாக அமையாது என்று பலரும் பேசத்தொடங்கிவிட்டனர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism