Published:Updated:

'முகமூடி'க்கு தயாராகும் ஜீவா !

Vikatan Correspondent

தமிழ் திரையுலகில் முதன் முறையாக உருவாக இருக்கும் சூப்பர் ஹீரோ கதை 'முகமூடி'.  ஜீவா, பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் வில்லனாக நரேன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் மிஷ்கின். 'யுத்தம் செய்' படத்திற்கு இசையமைத்த  இசையமைப்பாளர் ' கே ' இப்படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இப்படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார் ஜீவா.

'முகமூடி'க்காக ஜீவா, நரேன் இருவருமே 3 மாதங்கள் குங்பூ கலை கற்று இருக்கிறார்கள்.  ஹாங்காங் நாட்டை சேர்ந்த பல்வேறு டெக்னிஷயன்கள் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நாசர். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2வது வாரத்தில் துவங்க இருப்பதாக ஜீவா தனது டிவிட்டர் இணையத்தில் தெரிவித்து இருக்கிறார்.

2012ம் ஆண்டின் எதிர்ப்பார்ப்புக்கு உரிய படமாக மாறி இருக்கிறது 'முகமூடி'.