Published:Updated:

'ராஜபாட்டை'யில் ஸ்பீட் பிரேக்கர் !

விகடன் விமர்சனக்குழு

விக்ரம் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் 'ராஜபாட்டை'. திக்ஷா சேத் நாயகியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். PVP சினிமாஸ் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது.

'நண்பன்' படத்தினை தயாரித்த ஜெமினி நிறுவனம் 'ராஜபாட்டை' படத்தின் மொத்த உரிமையையும் வாங்கியது. அடுத்த மாதம் ஜெமினி நிறுவனம் தயாரித்த 'நண்பன்' படம் வெளியாக இருப்பதால், 'ராஜபாட்டை' படத்திற்கு கிடைத்த தியேட்டர்கள் அனைத்திலும் நண்பன் படத்தினை வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருந்தார்களாம்.

ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை 'ராஜபாட்டை' படத்தின் உரிமையை திருப்பி கொடுத்து விட்டது ஜெமினி நிறுவனம். இதனால் 'ராஜபாட்டை'யை யார் ரிலீஸ் செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இப்போது  'ராஜபாட்டை' படத்தினை PVP நிறுவனமே உலகம் முழுவதும் வெளியிட தீர்மானித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.