Published:Updated:

வேட்டை டீம் பாடல் !

விகடன் விமர்சனக்குழு

மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலாபால் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ' வேட்டை '. லிங்குசாமி இயக்க யுவன்சங்கர்ராஜா இசையமைத்து இருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க, யு.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.

2011 டிசம்பரில்  வெளியிட திட்டமிட்டவர்கள் தற்போது பொங்கல் 2012 வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

இப்படத்தில் இருந்து ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

'பாப்பரப்பா' என்று தொடங்கும் இந்த பாடலை பாடி இருக்கிறார் யுவன். கண்டிப்பாக இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் இந்த பாடலை மட்டும் டிசம்பர் 12-ம் தேதி வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

ஆர்யா, மாதவன், லிங்குசாமி, பாடலாசிரியர் நா.முத்துக்குமார், யுவன் ஆகியோர் 'பாப்பரப்பா' பாடல்  வீடியோ பதிவில் பங்கேற்க இருக்கிறார்கள். அமலாபால், ஆர்யா இருவரும் தான் அப்பாடலுக்கு நடனமாடி இருப்பதால் அமலாவையும் இந்த வீடியோ பதிவில் இணைக்கலாமா என்று ஆலோசித்து  வருகிறார்கள்.

'வேட்டை டீம் பாடல்' என்ற பெயரில் இதனை வெளியிட இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் 'கொலவெறி' பாடல் தானாம்.!