Published:Updated:

கமல் படத்தில் பாகுபலி நாயகி?

Vikatan Correspondent
கமல் படத்தில் பாகுபலி நாயகி?
கமல் படத்தில் பாகுபலி நாயகி?

ராஜேஷ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் தூங்காவனம், தீபாவளியன்று வெளியாகவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்பட வெளியீட்டுக்குப் பின்பு அடுத்தபடத்தைத் தொடங்கிவிருக்கிறாராம் கமல்.

உத்தமவில்லன் சமயத்தில் இயக்குநர் லிங்குசாமிக்கு உதவுவதற்காக ஒருபடம் நடிப்பதாக கமல் ஒப்புக்கொண்டிருந்தார். அடுத்ததாக அந்தப்படம்தான் தொடங்கவிருக்கிறதென்று சொல்லப்படுகிறது.

கமல் படத்தில் பாகுபலி நாயகி?

படத்தை மலையாள இயக்குநர் டி.கே.ராஜிவ்குமார் இயக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவைக் கேட்டிருக்கிறார்களாம். இவர்கள் கேட்கும் தேதிகள் தமன்னாவுக்கு ஒத்துவந்தால் அவர்தான் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

இது தொடர்பான பேச்சுகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம். விரைவில் முடிவுதெரியும் என்று சொல்கிறார்கள்.