Election bannerElection banner
Published:Updated:

தூங்காவனம் படம் எப்படி?

தூங்காவனம் படம் எப்படி?
தூங்காவனம் படம் எப்படி?

தூங்காவனம் படம் எப்படி?

சராசரி போலீஸ்கார கமலின் ஆசை மகன் கடத்தப்படுகிறான், தேடிச்செல்லும் கமல், மாயமாகும் போதைப்பொருள், கமல் மேல் சந்தேகப்பட்டு பின்தொடரும் த்ரிஷா, வில்லனாக மாஸ் காட்டும் பிரகாஷ் ராஜ் இவர்களின் ஒரு நாள் இரவில் நடக்கும் த்ரில் கலந்த ஆக்‌ஷன் கதையே தூங்காவனம்.

தூங்காவனம் படம் எப்படி?

2011ல் ப்ரென்சு மொழியில் 89 நிமிடம் ஓடக்கூடிய ஆக்‌ஷன் படமான 'ஸ்லீப்லஸ் நைட்'  என்கிற படமும்  தூங்காவனமும் ஒரே சிறுகதையிலிருந்து படமாக்கப்பட்டது. அந்த ப்ரெஞ்ச் சிறுகதையின் உரிமையை கமல் வாங்கியுள்ளார். அதை  தமிழுக்கு ஏற்றவாறு 127 நிமிடமாக்கி சுவாரஸ்யத்தையும் விருவிருப்பையும் கலந்து தந்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

ஆஷா சரத்திடம் விவாகரத்து பெற்று மகனோடு இருக்கும் நார்காட்டிக்ஸ் அதிகாரி கமல்ஹாசன். பணத்திற்கு ஆசைப்பட்டு விலைமதிப்புள்ள போதைப்பொருளை யூகிசேதுவுடன் சேர்ந்து மறைத்துவைக்கிறார் கமல். அதனால் கமலின் மகனை கடத்திச் சென்று மிரட்டுகிறார் பிரகாஷ்ராஜ். போதைப்பொருளைக் கொடுத்து மகனை காப்பாற்றினாரா கமல் என்பதே க்ளைமேக்ஸ்.

காலையில் போதைப் பொருளைக் கைப்பற்றுவதில் முதல் காட்சித் தொடங்கி ஒரு நாள் இரவு முழுவதும் நடக்கும் சம்பவமே கதை. வேகமாக நகரும் முதல் பாதி, கதைக்கேற்ற மித வேகத்தில் இரண்டாம் பாதி என்று கச்சிதமாக படத்தொகுப்பை தந்திருக்கிறார் ஷான் முகமது. படத்தின் விருவிருப்பை கூட்டுவதற்கு ஏற்ற பலமான பின்னணி இசை. படத்தில் வைரமுத்து வரிகளில் ஒரே ஒரு பாடல் மட்டுமே. அதுவும் படம் முடிந்து டைட்டில் ஓடும்போது தான்.

யூகிசேது, கிஷோர், சம்பத், ஆஷா சரத் என்று அவர்களுக்கான கதாப்பாத்திரத்தில் பக்காவான நடிப்பை நடித்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் த்ரிஷாவிற்கு பேசப்படும் படங்களின் வரிசையில் இந்தப் படமும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. 

தூங்காவனம் படம் எப்படி?

“என் பையன் சட்டையில சின்ன கரை பட்டாலும் உன்ன செதச்சிடுவேன்” என்று சொல்லவுமே திரையரங்கே அதிர்கிறது. மகன் மேல் அதீத பாசம் வைத்திருக்கும் கமல், மகனிடம் பேசவேண்டும் என்று தொலைப்பேசியில் மட்டும் வந்துபோகும் ஆஷா சரத் காட்சிகள் கச்சிதம்.

சமையல் அறையில் கமலுடன் த்ரிஷாவின் சண்டைக்காட்சிகளில், கமலுக்கு இணையாக ஸ்கோர் செய்திருக்கிறார் த்ரிஷா. சண்டைக்குப் பிறகு என் மகனைக் காப்பாத்தணும் என்று கமல் கண்ணீர் விடும் காட்சிகள் க்ளாஸ் ரகம்.

வில்லனாக பிரகாஷ்ராஜ் டெரராக மட்டுமில்லாமல் கவுண்டர் காமெடியிலும், நடிப்பிலும் கைதட்டலை பெறுகிறார்.  படம் முழுவதும் ஒரு க்ளப்பிற்குள்ளேயே நடக்கிறது. பார்த்த காட்சிகளையே மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டிய துர்தஷ்டமான நிலை ரசிகர்களுக்கு நேர்ந்தது மட்டுமே கவலை. எதற்கெடுத்தாலும் சமையல் அறைக்குள் ஓடி வந்து ஒழிந்துகொள்கிறார் கமல். வேற இடமே இல்லையா பாஸ்!

கமல் படமென்றால் முத்த காட்சி நிச்சயம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக, இந்தப் படத்திலும் முத்தக் காட்சியை புகுத்தியிருக்கிறார் இயக்குநர். ஆனால் யார் அந்த நாயகி, எதற்கு அந்த காட்சி என்பது மட்டும் ட்விஸ்ட். படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க பாஸ்.

படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே, காதலுக்கென்று தனிக் காட்சிகள் இல்லை, தனியாக காமெடி டிராக் என்றில்லாமல் படத்தொடு நகரும் காமெடிகள் என்று தமிழ் சினிமாவின் அடுத்தக் கட்ட நகர்விற்கு தேவையான படங்களில் தூங்காவனமும் ஒன்று.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு