Published:Updated:

நான் தமிழனா,என்பது நாட்டின் முக்கியப் பிரச்னையா? - விஷால் கேள்வி!

விகடன் விமர்சனக்குழு
நான் தமிழனா,என்பது நாட்டின் முக்கியப் பிரச்னையா? - விஷால் கேள்வி!
நான் தமிழனா,என்பது நாட்டின் முக்கியப் பிரச்னையா? - விஷால் கேள்வி!

ரஜினி , கமல் இருவரும் ஆளுக்கொரு கருத்தாக நடிகர் சங்கம் பெயர் மாற்றம் குறித்து பேசியுள்ளனர். ரஜினிகாந்த் தமிழ் நடிகர் சங்கம் எனவும், கமல் ஹாசன் இந்திய நடிகர் சங்கம் எனவும் பெயர் மாற்றக் கோரியுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஷால் இதற்கு பதிலளித்துள்ளார்.

அவர் பேசுகையில் ’எனக்கு இது அவ்வளவு முக்கியப்பிரச்னையாக தெரியவில்லை. எனினும் என் சொந்தக் கருத்து எனில் கண்டிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் என இருக்கட்டும் என்றே சொல்வேன். மேலும் நான் ரஜினி சார், கமல் சார் இருவரையும் மதிக்கிறேன். யாராவது ஒருவர் கருத்தை மட்டும் தான் நிறைவேற்ற முடியும் என்ற நிலையில் யாராவது ஒருவரை விட்டாலும் அதுவும் சர்ச்சைக்குள்ளாகும்.

நான் தமிழனா,என்பது நாட்டின் முக்கியப் பிரச்னையா? - விஷால் கேள்வி!

தென்னிந்திய நடிகர் சங்கம் பெயர் மாற்றம் என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதில் சட்ட ரீதியாக நிறைய சிக்கல்கள் உள்ளன,வெறுமனே போர்டை அழித்து பெயரை மாற்றும் வேலையில்லை அது அதெல்லாம் கூட்டத்தில் முடிவு பண்ணவேண்டிய விஷயம். கட்டிடம் கட்ட வேண்டும் அதுதான் என் முதல் குறிக்கோள். சீமான் அண்ணனுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ நான் தமிழன் என நிரூபிக்க வேண்டிய அவசியமல்லை.

 நான் பிறந்தது சென்னை, என்னோட பிறந்த சான்று தமிழ்நாடுதான். எல்லாவற்றிற்கும் மேல் நான் தமிழனா என்பது இப்போது நாட்டில் அவ்வளவு பெரிய பிரச்னையா. இதை நிரூபிக்கும் பொருட்டு நான் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார் விஷால்.