Published:Updated:

மெய்மறந்தேன் பாராயோ - படம் எப்படி?

மெய்மறந்தேன் பாராயோ - படம் எப்படி?
மெய்மறந்தேன் பாராயோ - படம் எப்படி?

உறவுகள் சுற்றி இருந்தும், அவர்களைப் பிரிந்திருந்தாலும், அதன் வேதனை தெரியாது. உறவுகளே இல்லாதவனுக்கு தான் சொந்தங்களோட அருமை புரியும் என்ற ஒன்லைன் டேக்கை நூல் பிடித்தாற்போல் உருவாகியிருக்கும் படம் தான் “மெய்மறந்தேன் பாராயோ”. சல்மான் கான் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான “ப்ரேம் ரத்தன் தனபாயோ” படத்தின் தமிழ் டப்பிங் வெர்சன்.

மெய்மறந்தேன் பாராயோ - படம் எப்படி?

சல்மான் கான் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். பிரேம் எனும் சாதாரண ராம பக்தர்.  விஜய் சிங் எனும் ப்ரீதம்பூர் அரண்மனை இளவரசராகவும் வருகிறார். அரண்மனை திவானாக அனுபம் கீர் நடித்திருக்கிறார். 

பாரம்பரிய வழக்கப்படி விஜய் சிங்கிற்கு பட்டாபிஷேக விழா நடக்கவிருக்கிறது. அந்த நேரத்தில் இளவரசர் விஜய்சிங்கை கொல்லுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த சம்பவத்தால் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடுகிறார் இளவரசர் விஜய்சிங். அந்த நேரத்தில் பிரேமை சந்திக்கும் அரண்மனையின் திவான் அனுபம் கீர் பிரேமை இளவரசர் போல சில நாட்கள் நடிக்குமாறு கேட்கிறார். விஜய்சிங்கிற்குப் பதில் இளவரசராக பிரேம் நடிக்கிறார். அதன் பின் நடக்கும் பாசமும், காதலும், பகையும் கடைசியில் அன்பு வெல்லுவதுமே படத்தின் கதைத்தளம்.

விஜய்சிங்கிற்கும், இளவரசி மைதிலிக்கும் முன்னரே நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் நடந்துமுடிந்திருக்கும். ஆனாலும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிறையவே  இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இளவரசரின் தம்பி, தங்கைகளும் கோவத்தினால் பிரிந்து இருப்பார்கள் இதற்கு நடுவே இளவரசராக நடிக்க சல்மான்கான் அரண்மனைக்கு எண்ட்ரி கொடுக்கிறார்.

சோனம் கபூரும் இளவரசராக நடிக்க வந்திருக்கும் பிரேமின் மீது காதலில் விழுகிறார். அடுத்தடுத்த காட்சிகளில் தன் தங்கைகளின் கோவத்தை போக்கி மீண்டும் அரண்மனைக்கே அழைத்துவருவது, தன் தம்பியால் ஏற்படும் சதியை முறியடித்து அன்பால் அனைவரையும் ஒன்றாக்க போராடும் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் சல்மான்கான்.

சமுக அக்கறையுடன் பஜ்ராங்கி பைஜான் திரைப்படத்தை உருவாக்கிய சல்மான் கான் இந்தப் படத்தில் வேறு கதைத்தளம் என்றாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்திருக்கிறார்.

தன்னுடைய படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கவேண்டும், எந்த வித முகச்சுழிவும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் சல்மான். எந்த நடிகையுடனும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை அதிகமாக தவிர்க்கும் சல்மான்கான் இந்தப் படத்தையும் நிறைவான காட்சிகளுடன் தந்திருக்கிறார்.

குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் அதனால் ஏற்படும் விளைவு என்று அனைத்தையுமே காட்சிப்படுத்தி அதற்கெல்லாம் ஒரே தீர்வு பணத்தால் விலைகொடுத்து வாங்க  முடியாத அன்பும், பாசமும் மட்டுமே என்று அழகாக சொல்லிச்சென்றிருக்கிறது மெய்மறந்தேன் பாராயோ.

தன் தங்கையின் பிடிவாதத்தை போக்குவதற்காக கால்பந்துவிளையாடும் காட்சியாகட்டும், கேட்டவுடன் அரண்மனையையே எழுதிவைக்க தயாராகும் காட்சியிலும் இளவரசர்  கதாப்பாத்திரத்தில் பிரேம் வாழ்ந்திருப்பது க்ளாஸ் மாஸ்.

மெய்மறந்தேன் பாராயோ - படம் எப்படி?

உனக்கு என்னவெல்லாம் பிடிக்காதுனு சொல்லு எழுதி வைச்சுக்கிறேன். அப்புறம் உனக்கு பிடிக்காததெல்லாம் மாத்திக்கிறேன் என்று சிரிக்கும் இடத்தில் சோனம் கபூர்  கோவத்துடன் பார்க்கும் காட்சி லவ்லி சூப்பர்.

காதலுடன் சோனம்கபூர் நெருங்கும் காட்சியில் தான் இளவரசர் இல்லையென்று விலகும் காட்சிகள் ஆசம் ஆசம். இருப்பினும் சல்மான்கானுக்கும் சோனம்கபூருக்கு வயது வித்தியாசம் தெரிவது மட்டுமே குறையாக தெரிகிறது.

இந்தி மற்றும் தமிழ், தெலுங்கில் டப்பிங் சேர்ந்து இந்தியாமுழுவதும் 2600 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுராஜ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க ஒளிப்பதிவை வண்ணமயமாக கொடுத்திருக்கிறார் மணிகண்டன்.

ஆற்றிற்கு நடுவே கண்ணாடிமாளிகை, கம்பீரமாக நிற்கும் அரண்மனை, வெளிச்ச விளக்குகளை அழகியலோடு படமாக்கிய ஒளிப்பதிவு என்று கணுசமான செலவினை ஒதுக்கி பிரம்மாண்டத்துடன் தந்திருப்பது மன நிறைவு.  குடும்பத்துடன் திரையரங்கை விசிட் அடிக்கும் ரசிர்களுக்கு சரியான தேர்வாக இப்படம் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பின் செல்ல