Published:Updated:

அட்லி விஜய் படத்துக்குப் பணச்சிக்கலா?

அட்லி விஜய் படத்துக்குப் பணச்சிக்கலா?
அட்லி விஜய் படத்துக்குப் பணச்சிக்கலா?

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இப்போது கோவாவில் நடந்துகொண்டிருக்கிறது. அடுத்தமாதம் முதல்வாரம் வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு படத்தின் படப்பிடிப்பு முழுமையடைந்துவிடும் என்றும் பாடல் மற்றும் மற்றும் தேவைப்படும் சில காட்சிகளை மட்டும் மறுபடி படமாக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

அட்லி விஜய் படத்துக்குப் பணச்சிக்கலா?

இந்தப்படம் தொடங்குகிற நேரத்தில், படத்தின் முக்கியமான பல காட்சிகள் சீனாவில் படமாக்கப்படவிருக்கிறது என்று சொன்னார்கள். அதற்காக சுமார் ஒருமாத காலம் இயக்குநர் அட்லி சீனா போய் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைப் பார்த்துவிட்டு வந்தார் என்றும் சொல்லப்பட்டது. படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு அங்குதான் தொடங்கும் என்று சொன்னவர்கள், படப்பிடிப்பு தொடங்கிய நேரத்தில் பருவநிலை சரியலில்லை என்பதால் அங்கு போகவில்லை என்று சொன்னார்கள்.

படப்பிடிப்பே முடிவடைகிற நிலையில் சீனா போகிற மாதிரியே தெரியவில்லை. சீனாவில் படமாக்குவதாகத் திட்டமிட்டிருந்த ஒரு பாடலை செட் போட்டு சென்னையிலேயே எடுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

விஜய் போன்ற முன்னணிநடிகர் நடிக்கும் படத்துக்கு பொருளாதாரச்சிக்கல் வர வாய்ப்பில்லை, படத்தைத் தாணு தயாரிக்கிறார் எனும்போது அவரும் செலவு செய்யத் தயங்குகிறவர் இல்லை எனும்போது சீனாவுக்கு ஏன் போகவில்லை? அங்கு சரியான லொகேஷன் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

உண்மையிலேயே லொகேஷன் கிடைக்கவில்லையா? அல்லது செலவைக்குறைப்பதற்காக அகு போகாமல் விட்டுவிட்டார்களா? என்பது இப்போது விவாதமாகிக்கொண்டிருக்கிறதாம்.

இந்நிலையில், வரும் 26ம் தேதி இப்படத்திற்கான முதல்பார்வை வெளியிடவிருப்பதாக அட்லி ட்விட்டரில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.