Published:Updated:

’பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்... ’சைஸ் ஸீரோ நல்லாவா இருக்கு?’ - நிஜ இஞ்சி இடுப்பழகிகளின் கேள்வி

’பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்... ’சைஸ் ஸீரோ நல்லாவா இருக்கு?’   - நிஜ இஞ்சி இடுப்பழகிகளின் கேள்வி
’பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்... ’சைஸ் ஸீரோ நல்லாவா இருக்கு?’ - நிஜ இஞ்சி இடுப்பழகிகளின் கேள்வி

’பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்... ’சைஸ் ஸீரோ நல்லாவா இருக்கு?’   - நிஜ இஞ்சி இடுப்பழகிகளின் கேள்வி

ஞ்சி இடுப்பழகி’.... அனுஷ்காவின் டெடிகேஷனான முயற்சிக்காகவே பலரும் இப்படத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். முக்கியமாக உடல் எடை கூடும் பிரச்னை பலருக்கும் இப்போது கடும் சங்கடமான நிலையாகவே மாறியுள்ள நிலையில் இதுகுறித்து சில ‘ரியல்’ இஞ்சி இடுப்பழகிகளிடம் கேட்டால்...

’பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்... ’சைஸ் ஸீரோ நல்லாவா இருக்கு?’   - நிஜ இஞ்சி இடுப்பழகிகளின் கேள்வி

ஆர்த்தி கணேஷ்: இந்தப் படத்த நான் ரொம்பவே எதிர்பார்த்துகிட்டு இருக்கேன். நமக்காக ஒரு படம், நமக்கு நெருக்கமான ஒரு கதை. நீங்களே சொல்லுங்க இந்த ‘சைஸ் ஸீரோ’ பெண்கள் பார்க்க லட்சணமாவா இருக்காங்க. கடவுள் குடுத்த ஒரு வாழ்க்கையில போயி இத சாப்பிட மாட்டேன் அத சாப்பிட மாட்டேனு சொல்லுற இந்த ஹீரோயின்களை பார்த்தா பாவமா இருக்கும். சில பேரு இங்க் ஃபில்லரில் தண்ணி குடிப்பாங்க. நமக்கு பிரேக்னு சொன்னா அவ்ளோ தான் 'கரும்பு தோட்டத்தில்' யானை புகுந்த மாதிரி ஜாலியா எது வேணாலும் சாப்பிடுவோம். ஆனால் அவங்கள பார்க்கும் போது பாவமா இருக்கும். கொஞ்சம் சைஸ் கம்மி பண்ணி ஸ்ட்ரக்சரா இருக்கறது வேற, எலும்பும் தோலுமா இருக்கறது வேற. அதை அழகுன்னு சொல்றதைத்தான் ஏத்துக்க முடியலை. ஒரு காலத்துல கே.ஆர்.விஜயா, காஞ்சனா, சாவித்ரி, ஏன் குஷ்பு, ஜோதிகா இப்படி இவங்கல்லாம் கொஞ்சம் பப்ளியா இருந்தவங்க தான். சினிமாவுல வேற லெவல் தொட்டாங்க. சில அப்பா, அம்மாக்கள் வேணும்னா பொண்ணு நயன்தாரா , மாதிரி த்ரிஷா மாதிரி இருக்கணும்னு நினைக்கலாம், எங்க அப்பா என்னை ஆர்த்தியா பார்க்கணும்னு தான் ஆசைப்பட்டாங்க. ஒரு பொண்ண குண்டா, ஒல்லியானு பார்க்காம அவங்க குணத்த பார்க்கலாம். எனக்கு கிடைச்ச கணவரும் அப்படிதான். ஆர்த்தியதான் அவருக்கு பிடிச்சது, ஒரு தடவைக் கூட என்னை வெயிட் குறைக்கச் சொல்லி சொன்னதில்ல. ஆனாலும் சில மைனஸ் இருக்கு. வெயிட் போட்டா ஆரோக்கியம் குறைய ஆரம்பிக்கும். நானும் குறைக்க ட்ரை பண்றேன். இன்னொன்னு ஒரு படம் அதுக்காக குறைக்கணும்னா கண்டிப்பா நான் ரெடி. ஏன்னா குண்டான பெண்களுக்கு மன வலிமை ஜாஸ்தியாச்சே.

’பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்... ’சைஸ் ஸீரோ நல்லாவா இருக்கு?’   - நிஜ இஞ்சி இடுப்பழகிகளின் கேள்வி

வித்யூலேகா: எனக்கு படத்தோட கான்செப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா, சைஸ் ஸீரோ என்னங்க கான்செப்ட்! கரீனா கபூர் இப்போ அழகா இருக்காங்க. ஆனால் பெண்மைக்கான கவர்ச்சி அவங்ககிட்ட இருக்கா சொல்லுங்க. முன்னாடி படமெல்லாம் எவ்ளோ அழகா, பூரிப்பா இருப்பாங்க. ஆனா, இப்போ உடம்பெல்லாம் வத்தி எலும்பும் தோலுமா... அவங்க ஆரோக்கியமா இருக்காங்களான்னே சந்தேகம்தான். சில ஹீரோயின்ஸ்லாம் நானே பார்த்திருக்கேன். மயங்கி விழுவாங்க, அவங்களால கொஞ்ச நேரம் வெயில்ல நிக்க முடியாது. ஏன்னா... வெளியே ஸ்லிம்மா இருந்தாலும், உள்ளே அவ்ளோ வீக்கா இருப்பாங்க. நல்ல ஸ்ட்ரக்சர் ஓகே. ஆனா எலும்பு தெரியற அளவுக்கெல்லம் இருந்தாதான் அழகுன்னு ஒரு மாயைல இருக்காங்க. ஏன் இவ்ளோ படம் நடிச்ச அனுஷ்காவே குண்டாகி முயற்சி பண்ணதுனால தான் அவங்களுக்கு லேடி விக்ரம், லேடி கமல்ஹாசன்னு பேரு கிடைச்சது. உடல் எடை குறைக்கலாம் அதுவும் இயற்கையான முறையா இருக்கணும். எனக்கு கோடி குடுத்தாலும் நான் உடல் எடை குறைச்சி ஸ்ட்ரக்சரா வேணும்னா ஆவேன். கண்டிப்பா சைஸ் ஸீரோ மாதிரியெல்லாம் ஆகவே மாட்டேன். எனக்கு கல்யாண புரபோசல்ல இப்படி கேட்டா கூட அந்த மாப்பிள்ளையே வேணாம்னு சொல்லுவேன். வித்யூலேகாவ வித்யூலேகாவா ஏத்துக்கணும் அப்படி ஒருத்தர் தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். படத்துல ஸ்லிம் கேரக்டர் நடிக்கணும்னு டைரக்டர்ஸ் கேட்டா கூட கொஞ்சம் வெயிட் குறைப்பேன். ஆனா சைஸ் ஸீரோ கிடையாது!

- ஷாலினி நியூட்டன் - 

அடுத்த கட்டுரைக்கு