Published:Updated:

ஈட்டி - படம் எப்படி?

ஈட்டி - படம் எப்படி?
ஈட்டி - படம் எப்படி?

தஞ்சாவூரில் ஹெட்கான்ஸ்டபிள் மகனான அதர்வாவிற்கு ஒரு வித்தியாசமான உடல் குறை. சின்னக்காயம் பட்டாலும் மயங்கிவிடுவார், கொஞ்சம் பெரிய காயம் என்றாலும் உயிருக்கு ஆபத்தாகும் அளவிற்கு ரத்தம் உறையாமல் கொட்டிக்கொண்டே இருக்கும். இந்நிலையில் நேர்மையாக இருப்பதால் வசதி குறைவாக இருக்கும் ஜெயப்பிரகாஷ் தன் மகனை உயர்ந்த பதவியில் அமரவைக்க ஆசைப்படுகிறார்.

ஈட்டி - படம் எப்படி?

அவரின் ஆசைக்கு பயிற்சியாளர் ஆடுகளம் நரேன் உதவி செய்ய முன்வருகிறார். அதர்வாவை அத்லெட்டிக்கில் இந்திய அளவில் வெற்றி பெற வைத்தால் அரசு வேலை கிடைக்கும் என்பதால் முழுநேரமும் அவரை ஊக்குவித்து வெல்ல வைக்கிறாரா என்பது ப்ளாட்.இதன் உபகதையாக ஶ்ரீதிவ்யா உடன் ஏற்படும் நட்பு மற்றும் திருமுருகனுக்கு அறியாமல் செய்த உதவியினால் பெரிய பிரச்சினைக்கு உள்ளாகும் அதர்வா அதை வென்று தன் லட்சியத்தில் வெல்ல முடிந்ததா என்பதாக கதை செல்கிறது.  அதர்வா நடிப்பில் ரவிராசு இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த  'ஈட்டி' படம் குறித்து கொஞ்சம் பாஸிடிவ் ரிசல்ட்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதர்வா, கம்ப்ளீட் டெடிகேட்டிவான ஹீரோன்னா அது அதர்வாதான். எப்பவுமே டைரக்டர் மெட்டீரியலான அதர்வா ஒரு அத்லெட் வீரராக   அப்படியே நம் கண் முன்னால் வந்து நிற்கிறார். ஹர்டில்ஸ் ஸ்பின்ட்லிங், ரன்னிங் என அவரின் பயிற்சியில் வெல்ல துடிக்கும் வீரரின் லட்சியம் தெறிக்கிறது. ஶ்ரீதிவ்யா - பெரிதாக ரொமான்ஸுக்கு சான்ஸ் இல்லாத கதையென்றாலும், வார்த்தைகளில்லாமல் அதர்வாவை முத்தமிடச்செய்யும் காட்சி, லவ் ப்ரோபோஸுக்கு முந்திய ப்ளிர்ட்டை வெட்கப்புன்னகையுடன் எதிர்கொள்ளும் க்யூட் என கிடைத்த வாய்ப்பில் சரியாக செய்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ் - அதர்வாவின் அப்பாவாக வருகிறார்.

ஈட்டி - படம் எப்படி?

இது போன்ற நடுத்தர குடும்பத்து நேர்மையான போலீஸ்கார அப்பாக்களை பார்த்துவிட்டாலும் தன் மகனுக்கு முன்னால் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்கும் போதும், ஸ்போர்ட் கோட்டாவிலாவது உயர் பதவிக்கு வரமுடியும் என்பதற்காக,  அதர்வாவிற்கு இருக்கும் உடல் பிரச்சினை தெரிந்தே ரிஸ்க் எடுப்பது,  என தன் போர்ஷனை சரியாக செய்திருக்கிறார். சரவணன் அபிமன்யூ -  இரண்டு ஊர்களில் நடக்கும் கதை என்பதால் இரண்டுக்கும் டோன் வித்தியாசம் காட்டியுள்ளார்.

சண்டைக்காட்சிகளில் நுட்பமாகவும், ஸ்போர்ட்ஸ் காட்சிகளில் ப்ரைட்டாகவும் என படத்திற்கு துணை செய்துள்ளார். ஜிவி.பிரகாஷ் - படம் முழுக்க பின்னணி இசையில் நல்ல ஸ்கோரிங் செய்திருக்கும் ஜிவி  'நான் பிடிச்ச மொசக்குட்டி' பாடலில் சக்திஶ்ரீகோபாலனுடன் நன்றாக பாடியுள்ளார். அதிலில்லாமல் படத்தில் அங்கங்கு வரும் ஜிங்கிள்ஸும் ஐஸ்க்ரீம் டாப்பிங்ஸாக டேஸ்ட் கூட்டுகிறது.   ஒரு தந்தைக்கு தன் மகனை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும், பங்கு கொள்ளும் ஈவென்ட்களில் ஜெயிக்க வேண்டும் என ஆர்வம் இருக்கும் ஆனால்  அதையெல்லாம் தாண்டி காட்டும் நரேன் காட்டும் ஆர்வம் ஒவ்வொரு ஸ்போர்ட்ஸ் கோச்சிற்கும் செய்திருக்கும் மரியாதை.  ஒரு தவறான தொலைபேசி அழைப்பு எப்படி இன்னொருவரை வாழ்க்கைக்குள் கொண்டு வருகிறது அது எத்தனை பிரச்சினைகளை உருவாக்குகிறது என்பதை சிக்கலில்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரவிஅரசு.

ஈட்டி - படம் எப்படி?

யூகிக்க கூடிய க்ளைமாக்ஸில் ஆடியன்ஸ் உட்கார வைப்பது கொஞ்சம் கஷ்டமான வேலைதான்,அதை செய்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் மெருகேற்றி நல்லதொரு படம் கொடுத்திருக்கலாம், நகைச்சுவை இது போன்ற படங்களுக்கு முக்கிய தேவை அதற்கான எந்த முயற்சியிலும் இயக்குநர் ஈடுபடவேயில்லை. அழகம்பெருமாள்,சோனியா, திருமுருகன், ஆடுகளம் முருகதாஸ் என பெர்ப்பாமென்ஸில் பின்னும் கூட்டம் இருந்தாலும் பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அப்புறம் அதர்வா ப்ரதர்,  இயக்குநர்களின் சொன்ன சொல் கேட்கும் பிள்ளையாக இருப்பது நல்லதுதான், அதே டெடிகேஷனை கதை கேட்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.