Published:Updated:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கிய ரஜினிகாந்த்! (படங்கள்)

Vikatan Correspondent
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கிய ரஜினிகாந்த்! (படங்கள்)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கிய ரஜினிகாந்த்! (படங்கள்)

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, சேலைகள், பாய்,  குழந்தைகளுக்கான உணவு என பல்வேறு பொருட்களை நடிகர் ரஜினிகாந்த் வழங்கி வருகிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கிய ரஜினிகாந்த்! (படங்கள்)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்து மழையால் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிர்த்து வருகின்றனர். வீடுகளை இழந்தவர்கள் சாலையோரங்களிலும், தெருக்களிலும் வசித்து வருகிறார்கள். தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகிறார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கிய ரஜினிகாந்த்! (படங்கள்)

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கிய ரஜினிகாந்த்! (படங்கள்)

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் உதவிடும் வகையில் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அரிசி மூட்டை, பாய், சேலைகள், பிஸ்கெட், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் ரஜினி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மேற்பார்வையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.