Published:Updated:

மணிரத்னம் படத்தில் கார்த்தி நடிப்பது உறுதியானது

Vikatan Correspondent
மணிரத்னம் படத்தில் கார்த்தி நடிப்பது உறுதியானது
மணிரத்னம் படத்தில் கார்த்தி நடிப்பது உறுதியானது

ஓகாதல்கண்மணி படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படம் பற்றிப் பல்வேறு தகவல்கள் வந்துவிட்டன. அவருடைய அடுத்த படத்தில் கார்த்தியும் துல்கரும் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. அதன்பின்னர் படத்திலிருந்து துல்கர் விலகிக்கொண்டார் கார்த்தியும் நானியும் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.

துல்கர் இருக்கிறார் கார்த்தியுடைய தேதிகள் ஒத்துவராததால் அவர் படத்தில் இல்லை என்றும் சொல்லப்பட்டது. கடைசியாக துல்கர், நானி ஆகியோர் நாயகர்களாகவும் நித்யாமேனன், ஷயாமி என்கிற பதுமுகம் நாயகியாகவும் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. மணிரத்னம் இந்தியில் படம் இயக்கப்போகிறார் என்றும் சொன்னார்கள்.

மணிரத்னம் படத்தில் கார்த்தி நடிப்பது உறுதியானது

இப்போது மீண்டும் நிலைமை மாறியிருக்கிறது. மணிரத்னம் படத்தில் கார்த்தி நடிக்கவிருப்பது உறுதியாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கார்த்தியின் தற்போதைய படங்களை முடித்துவிட்டு மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அனேகமாக ஏப்ரலில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.