Published:Updated:

ஆரண்ய காண்டம் ! : ரசிக்கும் அனுராக்

இந்தி திரையுலகில் வரவேற்பைப் பெற்ற இயக்குனர் அனுராக் காஷ்யப். Dev D, No Smoking போன்ற படங்களை இயக்கிய அனுராக் தமிழ்த் திரையுலகின் மீது பெரிய மரியாதை வைத்திருக்கிறார். 'அழகர்சாமியின் குதிரை' , 'களவாணி' ஆகிய படங்களை ஆங்கில சப்-டைட்டில் இல்லாமலேயே பார்த்து ரசித்தாராம்.

பாலாவின் தீவிர ரசிகரான இவர் இப்போது அடிக்கடி பார்க்கும் படம் 'ஆரண்ய காண்டம்'.

இப்படம் குறித்து அனுராக் காஷ்யப், " எனக்கு ஆரண்ய காண்டம் படம் ரொம்ப பிடித்திருக்கிறது. படத்தில் வரும் சில ஒரு வரி பஞ்ச் வசனங்களை மிகவும் ரசிப்போம். அப்படத்தை மீண்டும் மீண்டும் போட்டு பார்த்தோம். மும்பை திரையுலகத்தினர் மத்தியில் அப்படம் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது "  என்று சொல்லியிருக்கிறார்.