Published:Updated:

மணிரத்னம் படத்தில் பசுபதி !

Vikatan Correspondent

தூள், திருப்பாச்சி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார் பசுபதி. அதன் பின்னர் அவருக்கு கிடைத்த பல வாய்ப்புகள் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாகவே அமைந்தது. அதனால் பசுபதி, தன் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்து,  'மஜா', 'குசேலன்', 'வெடிகுண்டு முருகேசன்' 'ராமன் தேடிய சீதை' போன்ற படங்களில் நடித்தார்.

வசந்தபாலன் இயக்கத்தில் ஆதியுடன் இணைந்து 'அரவாண்'  படத்தில் நடித்திருக்கிறார் பசுபதி. இப்போது அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பசுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இப்படத்தில் கார்த்திக்கின் மகன் கௌதம் அறிமுகமாகிறார். அர்ஜுன் மற்றொரு  முக்கிய பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் நடித்திருக்கிறார் பசுபதி.  மணிரத்னம் தன் படங்கள் குறித்த தகவல்கள் வெளியே வராமல் பார்த்துக் கொள்வார்.  இந்த படத்தில் பசுபதி ஒரு மீனவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.