Published:Updated:

ரஜினியின் பாட்ஷா, 21 வருடங்களுக்குப் பிறகும் பொட்டிலடிக்கும் வசனங்கள்

1995 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியான படம் பாட்ஷா. சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன், ஆனந்தராஜ் உட்பட பலர் நடித்திருந்த இந்தப்படம் ரஜினியின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படம். இன்றோடு இந்தப்படம் வெளியாகி 21 வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும் இன்றுவரை அந்தப்படத்துக்கான வரவேற்பு குறையவில்லை.

21 ஆண்டையொட்டி அந்தப்படத்தில் இடம்பெற்று தமிழ்மக்களின் வாழ்க்கையில் நிலைபெற்றுவிட்ட சில வசனங்கள்...

ரஜினியின் பாட்ஷா, 21 வருடங்களுக்குப் பிறகும் பொட்டிலடிக்கும் வசனங்கள்

“ஐயா! என் பேரு மாணிக்கம் எனக்கு இன்னொரு பேரு இருக்கு” இதன் பிறகு யுவராணி அவர் கிட்ட என்ன சொன்னீங்க என்று கேட்க “உண்மையைச் சொன்னேன்” என்பது இன்று வரை ரசிகர்களிடம் பிரபலம். “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” வசனமும் காட்சி அமைப்பும் ஒளிப்பதிவும் இசையும் அடி தூள் தான். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சிகள்.

இந்த இடத்தில் ரஜினி கூறும் “டேய் டேய் டேய் நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான் கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்” என்று கூறுவது அதகளம்.

உன்ன இந்த பக்கம் மறுபடியும் பாத்தேன்..பாத்த இடத்திலேயே குழி தோண்டி பொதைச்சுடுவேன். ரஜினியிடம் அவர் தம்பி பேசும், அவங்களுக்கு டிரீட்மெண்ட் பண்ற டாக்டர்ஸ் எல்லாம் மெரண்டு போயிருக்காங்க, இது சாதாராண ஆள் அடிச்ச அடியில்ல ரத்தம் சதை நாடி நரம்பெல்லாம் வெறி பிடிச்சவன் அடிச்ச அடி என்கிற வசனம் அதை எழுதிய பாலகுமாரனை நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது இது வரை தொலைக்காட்சியில் அதிகம் போடப்பட்ட படங்கள் என்றால் அது நிச்சயம் பாட்ஷாவாகத்தான் இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு