Published:Updated:

ரெவணண்ட் 12… மேட் மேக்ஸ் 10… அதிர வைக்கும் ஆஸ்கார் நாமிநேஷன்!

ரெவணண்ட் 12… மேட் மேக்ஸ் 10… அதிர வைக்கும் ஆஸ்கார் நாமிநேஷன்!
ரெவணண்ட் 12… மேட் மேக்ஸ் 10… அதிர வைக்கும் ஆஸ்கார் நாமிநேஷன்!

ஸ்கார் என்றாலே, ரகுமானுக்கு அடுத்து, 'டக்'குன்னு நினைவுக்கு வருவது லியோனார்டோ டிகாப்ரியோ தான். இதுவரை நான்கு முறை, 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்பது போல் ஆஸ்கார் அவார்டு, அவரை வைத்து செய்து விட்டது. இப்போது ஐந்தாவது முறையாக, தி ரெவணண்ட் திரைப்படத்திற்காக நாமினேட் ஆகியுள்ளார் டிகாப்ரியோ. சிறந்த நடிகருக்கான விருதோடு சேர்த்து, மொத்தம் 12 விருதுகளுக்கு, தி ரெவணண்ட் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சையின்ஸ் வெளியிட்டுள்ள ஆஸ்கார் விருதுக்கான நாமிநேஷன் பட்டியலில், மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட் திரைப்படம் 10 விருதுகளுக்கும், தி மார்ஷியன் திரைப்படம் 7 விருதுகளுக்கும், கெரோல், ஸ்பாட் லைட் மற்றும் ப்ரிட்ஜ் ஆப் ஸ்பைஸ் ஆகிய திரைப்படங்கள் 6 விருதுகளுக்கும், தி பிக் ஷார்ட் மற்றும் ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் ஆகிய திரைப்படங்கள் 5 விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

ரெவணண்ட் 12… மேட் மேக்ஸ் 10… அதிர வைக்கும் ஆஸ்கார் நாமிநேஷன்!

சிறந்த திரைப்படத்திற்கு, தி ரெவணண்ட், மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட், தி மார்ஷியன், தி பிக் ஷார்ட், ப்ரிட்ஜ் ஆப் ஸ்பைஸ், ஸ்பாட் லைட், ப்ரூக்ளின் மற்றும் ரூம் ஆகிய எட்டு திரைப்படங்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளன.

சிறந்த நடிகருக்கான விருதிற்கு, லியோனார்டோ டிகாப்ரியோ (தி ரெவணண்ட்), மேட் டேமன் (தி மார்ஷியன்), ப்ரையன் க்ரான்ஸ்டன் (ட்ரம்போ), மைக்கெல் ஃபாஸ்ட்பெண்டர் (ஸ்டீவ் ஜாப்ஸ்), எட்டி ரெட்மெய்ன் (தி டேனிஷ் கேர்ள்) ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த நடிகைக்கான விருதிற்கு, கேட் ப்ளான்செட் (கெரோல்), ப்ரீ லார்சன் (ரூம்), ஜெனிஃபர் லாரன்ஸ் (ஜாய்), ஷார்லெட் ரேம்ப்லிங் (45 இயரஸ்), சியர்ஷா ரோனான் (ப்ரூக்ளின்) ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த இயக்குநருக்கான விருதிற்கு, அலெஹான்ரோ கொன்சாலஸ் இன்யாரிட்டோ (தி ரெவணண்ட்), ஜார்ஜ் மில்லர் (மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட்), ஆடெம் மெக்கே (தி பிக் ஷார்ட்), டாம் மெக்கார்த்தி (ஸ்பாட் லைட்), லென்னி ஏப்ரஹாம்சன் (ரூம்) ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

ரெவணண்ட் 12… மேட் மேக்ஸ் 10… அதிர வைக்கும் ஆஸ்கார் நாமிநேஷன்!

சிறந்த துணை-நடிகருக்கான விருதிற்கு, சில்வெஸ்டர் ஸ்டெலோன் (க்ரீட்), க்ரிஸ்டியன் பேல் (தி பிக் ஷார்ட்), டாம் ஹார்டி (தி ரெவணண்ட்), மார்க் ரைலன்ஸ் (ப்ரிட்ஜ் ஆப் ஸ்பைஸ்), மார்க் ரஃபலோ (ஸ்பாட் லைட்), ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த துணை-நடிகைக்கான விருதிற்கு, கேட் வின்ஸ்லெட் (ஸ்டீவ் ஜாப்ஸ்), ஜெனிஃபர் ஜேசன் லே (தி ஹேட்ஃபுல் எயிட்), ரூனி மாரா (கெரோல்), அலீஷா விகேண்டர் (தி டேனிஷ் கேர்ள்), ரேஷல் மெக்ஏடம்ஸ் (ஸ்பாட் லைட்) ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதிற்கு, இன்சைட் அவுட், அனோமலிசா, ஷான் தி ஷீப், பாய் ஆண்ட் தி வைல்ட், வென் மார்னி வாஸ் தேர் ஆகியவை நாமினேட் செய்யப்பட்டுள்ளன.

இவற்றைத் தவிர, சிறந்த திரைக்கதை, சிறந்த தழுவிய திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலித்தொப்பு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த பாடல், சிறந்த குறும்படம், சிறந்த ஆவணப்படம் ஆகியவற்றிற்காகவும் பல திரைப்படங்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளன.

சிறந்த நடிகைக்கான விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள 'ஷார்லெட் ரேம்ப்லிங்'க்கு 69 வயதாகிறது. ஒருவேளை அவர் இவ்விருதை பெற்றால், ஜெஸ்ஸிகா டான்டி மற்றும் கேத்ரின் ஹெப்பர்னுக்குப் பின் இவ்விருதை பெரும் வயது மிகுந்த நடிகை என்ற சாதனையை படைப்பார்.

இந்த ஆண்டு, பல சிறந்த மற்றும் தகுதியான படங்கள் ஆஸ்காருக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும், ஒரு பெரும் சர்ச்சை பொதுமக்களிடம் இருந்து எழுந்துள்ளது. சிறந்த நடிகர்-நடிகை மற்றும் சிறந்த துணை நடிகர்-நடிகை ஆகிய விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள இருபது பேரும், வெள்ளை நிறத்தவர்கள் என்பது தான் அந்த சர்ச்சைக்கான காரணம்.

க்ரீட் திரைப்படத்தில் நடித்த மைக்கெல் ஜார்டன், ஸ்ரெயிட் அவுட்டா காம்ப்டன் திரைப்படத்தில் நடித்த ஜேசன் மிட்ஷெல், பீஸ்ட்ஸ் ஆஃப் நோ நேஷன் படத்தில் நடித்த இட்ரிஸ் எல்பா ஆகிய கருப்பின நடிகர்கள், பல விருதுகளை வென்றிருந்தாலும், அவர்கள் ஆஸ்காருக்கு நாமினேட் செய்யப்படாதது, அவர்களின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மேலும், மார்ஷியன் திரைப்படத்தின் இயக்குநரான ரிட்லீ ஸ்காட் மற்றும் பிரபல இயக்குநர்களான ஸ்பீல்பர்க் (ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்) மற்றும் டாரன்டீனோ (தி ஹேட்ஃபுல் எயிட்) ஆகியோர் சிறந்த இயக்குநருக்கான பட்டியலில் இடம் பெறாததும் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார், யார் என்னென்ன விருதுகளை வாங்கினார்கள் என்பதை, ஃபிப்ரவரி மாதம் 28-ம் தேதி நடக்கும் 88-வது ஆஸ்கார் விழாவுக்கு பின் தெரிந்து கொள்ளலாம். அதுவரை காத்திருப்போம்…

ஜெ. விக்னேஷ்

(மாணவ பத்திரிகையாளர்)