Published:Updated:

21 வருடங்கள் கழித்து கௌதம் கார்த்திக் படத்தில் இணைந்த இரு ஜாம்பவான்கள்!

Vikatan Correspondent
21 வருடங்கள் கழித்து கௌதம் கார்த்திக் படத்தில் இணைந்த இரு ஜாம்பவான்கள்!
21 வருடங்கள் கழித்து கௌதம் கார்த்திக் படத்தில் இணைந்த இரு ஜாம்பவான்கள்!

21 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் வரிகளில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி வரும் படம் “முத்துராமலிங்கம்”. கௌதம் கார்த்திக், கேத்ரீன் தெரசா நடிக்கும் இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

குளோபல் மீடியா ஒர்க்ஸ் D.விஜய் பிரகாஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவு U.K.செந்தில்குமார். இப்படத்தின் நிர்வாக மேற்பார்வை கமுதி A.செல்வம். முத்துராமலிங்கம் படம் மூலமாக மூன்று தலைமுறைகளுக்கு பாடல் எழுதும் பஞ்சு அருணாசலம் மீண்டும் இசைஞானி இசைக்கு வரிகள் எழுதவிருக்கிறார்.

21 வருடங்கள் கழித்து கௌதம் கார்த்திக் படத்தில் இணைந்த இரு ஜாம்பவான்கள்!

நடிகர் முத்துராமனுடன் “காற்றினிலே ஒரு கீதம்”, “மயங்கினாள் ஒரு மாது”, நடிகர் கார்த்திக்குடன் “சின்ன கண்ணம்மா” “என் ஜீவன் பாடுது”, தற்போது கௌதம் கார்த்திக்குடன் “முத்துராமலிங்கம்” என முன்று தலைமுறைகளுடன் பணியாற்றியவர் பஞ்சு அருணாசலம்.