Published:Updated:

மிஸ்டர் மியாவ்: தலைவர்கள் எஸ்கேப்!

மிஸ்டர் மியாவ்: தலைவர்கள் எஸ்கேப்!

##~##

• 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ படப்பிடிப்பை, அரசாங்க அனுமதி எளிதில் கிடைக்காத சில சென்சிடிவ்வான பகுதிகளில் வேகவேகமாக நடத்துகிறார் உதயநிதி ஸ்டாலின். ஆட்சி மாறினால், அனுமதி கிடைக்காதே! 

• 'பொன்னியின் செல்வன்’ படத்தை டிராப் செய்துவிட்டார், மணிரத்னம். படத்தைத் தயாரிக்க இருந்த பிரபலமான சேனலுக்கும் விஜய்க்கும் ஏழாம் பொருத்தம். கூடவே, பட்ஜெட் இடித்தது. ''தயாரிப்பாளரை மாத்துங்க, நான் நடிக்கிறேன்...'' என்று மணியிடம் கோரிக்கை வைத்ததும் காரணமாம்!

• அஜீத்தின் 50-வது படமான 'மங்காத்தா’ ரிலீஸை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்து இருந்த  ரசிகர்கள் படுஅப்செட். மதங்களைத் தாண்டி வேளாங்கண்ணி, நாகூர், பகவதி அம்மன் கோயில்களுக்கு அஜீத் செல்வது வழக்கம்.

மிஸ்டர் மியாவ்: தலைவர்கள் எஸ்கேப்!

பஞ்ச் டயலாக்குக்கு கல்தா, அல்டிமேட் ஸ்டார் பட்டம் துறப்பு, ரசிகர் மன்றங்களுக்கு முழுக்கு போன்ற முடிவுகளை இந்த ஆலயங்களுக்குப் போய் வந்த பிறகுதான் எடுத்தாராம் தல!

• 'கோ’ பட வெற்றியால் குஷியில் மிதக்கிறார் நடிகை ராதா மகள் கார்த்திகா. ''உங்க அம்மா நடிச்ச முதல் படத்து ஹீரோ கார்த்திக். அவர் ஞாபகமாத்தான் உங்களுக்கு கார்த்திகான்னு பேரா?'' என்று ஆளாளுக்குக் கேள்வியால் துளைக்கிறார்களாம். முதலில் டென்ஷனான கார்த்திகா... அப்புறம் கூலாகி... கார்த்திக்கை நேரில் சந்திக்க ஆசைப்பட்டாராம். ஹெல்லோ... ஹெழ்ழோ...அப்பாயின்ட்மென்ட் குடுங்க சார்!

மிஸ்டர் மியாவ்: தலைவர்கள் எஸ்கேப்!
மிஸ்டர் மியாவ்: தலைவர்கள் எஸ்கேப்!

• ஆட்சி மாறிவிடுமோ என்கிற அச்சம், ஆளும் கட்சி சினிமா பிரமுகர்களையும் போட்டு ஆட்டுகிறது.  எல்லா விழாக்களிலும் மேடை ஏறும் இரண்டு முக்கியத் தலைகள், அப்படியே எஸ்கேப்!