Published:Updated:

ரஜினிக்கு என்னாச்சு...?

ரஜினிக்கு என்னாச்சு...?

ரஜினிக்கு என்னாச்சு...?

ரஜினிக்கு என்னாச்சு...?

Published:Updated:
##~##

ஜினி என்கிற ஒற்றை வார்த்தையை உச்சரித்​தாலே அவரது உலக ரசிகர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அவர்களுக்கு குளூகோஸ், வைட்டமின் மாத்திரை... எல்லாமே மூன்றெழுத்து மந்திரம் - ரஜினி என்ற பெயர்தான். இப்படி ரசிகர்களின் சர்வசக்தியான ரஜினி, 'சக்தி கொடு’ என்று, இன்று உடல் உபாதையால் சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்! 

ரஜினி சமீபத்தில் ஆசைப்பட்டு வாங்கிய, 'இன்னோவா சில்வர் டி.என்.ஒ-7- 2010’ கார், அவரது பிறந்த தேதியின் கூட்டு தொகையான 3-ம் எண்ணை ஞாபகப்படுத்தியபடி அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் நிற்க...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ரஜினிக்கு என்ன ஆச்சு?’ என்று சூப்பர் ஸ்டாருக்கு நெருங்கியவர்களிடம் கேட்டோம்.

''ரஜினி சார் உலகக் கோப்பை நிகழ்ச்சியைப் பார்க்க மும்பைக்கு போய் வந்ததில் இருந்தே, அவர்

ரஜினிக்கு என்னாச்சு...?

சொன்ன பேச்சை உடம்பு கேட்கவில்லை. மும்பை ஹோட்டலில் குடும்பத்தினர் எல்லோரும் சைவ உணவு சாப்பிட்டார்கள். ரஜினி சாப்பிட்ட அசைவ உணவில், ஏதோ கோளாறு. அப்போதே அவருக்கு வயிற்றுப் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. 'ராணா’ பூஜையின் முதல் நாள் நெடுநேரம் தூங்காமல் கண்விழித்து, முக்கியமானவர்களுக்கு போன் போட்டு பேசினார். அப்படியே அசதியோடு மறுநாள் பூஜைக்கு வந்தவர் அவரிடம் அந்த வழக்கமான துடிப்பு இல்லை. போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு உடனே காரில் ஏறி போய்விட்டார். வீட்டுக்கு வந்தவுடன் மயக்கம் வர, குடும்ப டாக்டர் ஆலோசனைப்படி இசபெல்லா ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். மும்பை ஹோட்டல் உணவு பற்றியும் கேட்டறிந்து , ரஜினிக்கு ஃபுட் பாய்ஸன் அதுதான் ப்ராப்ளம் வேறொன்றும் இல்லை என்று டாக்டர்கள் உரைத்தனர். முதல் முறை, கலைஞர் ரஜினியை குசலம் விசாரிக்க வந்தபோது, போட்டோ எடுக்க அரசு சார்பில் பகீரத பிரயத்தனம் நடந்தது. அப்போது முதல்வரிடம், 'அப்பாவோட முகமும், உடம்பும் ரொம்ப டல்லா இருக்கு. அதோட, போட்டோவுக்கு போஸ் கொடுத்தாஃபேன்ஸ்

ரஜினிக்கு என்னாச்சு...?

எல்லாம் ஃபீல் பண்ணுவாங்க...'' என்று கலங்கியபடி ஐஸ்வர்யா சொல்ல, போட்டோ திட்டம் கைவிடப்பட்டது. டாக்டர்கள் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்கச் சொல்லி வற்புறுத்​தினார்கள். பூஜை போட்ட நல்ல நாளில் சென்டிமென்ட்டாக அங்கே தங்கவிரும்பாத ரஜினி, அன்று மாலையே வீட்டுக்கு வந்துவிட்டார். இருந்தும், 'வீட்டுக்குப் போனால் யாரையும் சந்திக்கக் கூடாது. ஓய்வெடுங்கள்’ என்றே மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

மறுநாளே ரஜினிக்குத் தெரிந்த வி.ஐ.பி-க்கள் வீட்டுக்குப் படையெடுத்து மாறி மாறி உடல் நலம் பற்றி கேட்க... அவர்களுக்கு பதில் சொல்லியே ரஜினி மேலும் சோர்ந்துவிட்டார். அதுமட்டும் இல்லாமல், உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் வழக்கம்போல் ராகவேந்திரா மண்டபம் சென்று தனது வேலைகளைச் செய்தார். ரஜினி இயல்பாகவே ஃபாஸ்ட் பார்ட்டி... ஓர் இடத்தில்  உட்காராமல் எங்காவது சுற்றிக்கொண்டே இருந்தார். ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தபடி போனில் பேசினார்.

திடீரென்று, கடந்த 4-ம் தேதி இரவு எட்டு மணிக்கு சாப்பிட... சட்டென்று வாந்தி எடுத்தார். கடுமையான வைரஸ் காய்ச்சலும் தாக்க, மீண்டும் இசபெல்லாவில் அனுமதிக்கப்பட்டார். 'சாதாரண வார்டில் ரஜினி இருந்தால் குசலம் விசாரிப்போர் குவிந்து விடுவார்’ என்று தீவிர சிகிச்சைப் பிரிவில் மாற்றிவிட்டனர். டாக்டர்கள், 'வீட்டுக்கு அனுப்ப மாட்டோம். விசிட்டர் யாரையும் பார்க்கக் கூடாது. போனில் பேசவே கூடாது. இங்கேயே ஓய்வெடுங்கள்’ என்று கடுமையான உத்தரவு போட்டுவிட்டனர். அதனால் முக்கியமானவர்களுக்கு அவரது குடும்பத்தினரே, 'நாங்கள் தப்பாக நினைக்க மாட்டோம்... இப்போதைக்கு பார்க்க வரவேண்டாம்...’ என போன் செய்து நிலைமையை விளக்கி வருகிறார்கள். ஐஸ்வர்யாவும் ரசிகர்களுக்கு ரஜினியின் உடல்நிலை குறித்து அறிக்கைவிட்டு இருக்கிறார்!'' என்றார்கள் வருத்தமான குரலில்!

''ரஜினிக்கு அலோபதி மருந்துன்னாலே அலர்ஜி. அவரது பலத்துக்கு காரணம் யோகா ப்ளஸ் தியானமே. மனுஷனுக்கு தெம்பே உணவுலதான்.. ஆனா, ரஜினி சாப்பாட்டு அளவை ரொம்ப ரொம்ப குறைச்சுட்டார். காலையில ஒரே ஒரு ஆஃப்-பாயில்தான்... அதுபோதுமா?? அப்புறம் எப்படி உடம்புல தெம்பு இருக்கும்? நீர்ச்சத்து ரொம்ப குறைவா இருக்குன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும். 'யானை விழுந்தா எந்திரிக்க லேட்டாகும்... நான், குதிரை... டக்குனு எந்திரிச்சுடுவேன்..!’ என்று 'சந்திரமுகி’ விழாவில் ரஜினி சொன்ன டயலாக்கையே அவருடைய ரசிகர்களுக்கு சொல்றேன்!'' என்று விளக்கினார், வில்லனாக நடித்து வந்த ரஜினியை முதன் முதலாக 'பைரவி’ படம் மூலம் ஹீரோவாக்கிய கலைஞானம்!

- எம்.குணா  

'ராணா’ பட விளம்பரத்தில் சின்ன மகள் சௌந்தர்யா அஸ்வின் பெயர் இடம்பெற்று இருந்தது. 'ஐஸ்வர்யா தனுஷ் பெயர் இடம் பெறாததில் தனுஷ் வருத்தப்பட்டு பூஜைக்குக்கூட வராமல் தவிர்த்தாராம். 'இதனால் ரஜினி ரொம்பவும் அப்செட்டாக இருந்தார்’ என்று இன்னொரு டிராக்கில் எடுத்து விடுகிறார்கள் விவரமானவர்கள்!