Published:Updated:

கதை கேட்காமலேயே நடிக்கிறாரா தனுஷ்?

விகடன் விமர்சனக்குழு
கதை கேட்காமலேயே நடிக்கிறாரா தனுஷ்?
கதை கேட்காமலேயே நடிக்கிறாரா தனுஷ்?

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் புதியபடம் தயாராகிவருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். இப்படத்திற்காக தனுஷை சந்தித்த சுவாரஸ்ய அனுபவங்களை இயக்குநர் பகிர்ந்துகொண்டார்.

கதை கேட்காமலேயே நடிக்கிறாரா தனுஷ்?

"என்னுடைய இந்தக் கதைக்கு அனுபவமிக்க நடிகர் தேவைப்பட்டார், அதனால் தான் கதாபாத்திரத்தைத் தாங்கி, பிரதிபலிக்க அனுபவசாலியான தனுஷை நடிக்கவைக்க முடிவெடுத்தேன். தனுஷை சந்தித்த நாள் டிசம்பர் 28 கிருஸ்துமஸ் கொண்டாடி விட்டு அவரைச் சந்தித்தேன்”.

“ஒரு படம் செய்யலாமா?”உடனே 
“எப்போன்னு சொல்லுங்க வர்றேன்” என்றார்.

 கதைகூட கேட்காமல் ஜூன் 1 ஆம் தேதி முதல் 60 நாள் ஒரே கட்டமாக தேதி தந்தார். ஷூட்டிங் ஆரம்பித்து பத்து நாட்கள் வரை படத்தின் கதை என்ன என்பதே அவருக்கு தெரியாது அவரது கதாபாத்திரத்தைப் பற்றி மட்டுமே சொல்லி இருந்தேன், அதற்குப் பிறகுதான் முழுக் கதையையும் சொன்னேன் . அதை உள்வாங்கிக் கொண்டு, ஒரு புதுமுகம் மாதிரி அருமையாக நடித்துக் கொடுத்தார். என்ன எடுக்கிறோம் என்று மானிட்டர் கூட பார்க்க மாட்டார்.

தவிர, படத்தில் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலில் ஓடுவது, சண்டைக்காட்சிகள் என தூள் கிளப்பியிருக்கிறார் தனுஷ் என்கிறார் பிரபுசாலமன்.