Published:Updated:

’அஜித்துக்கே சவால் கொடுப்பாங்க கலா மாஸ்டர்!’ - நெகிழும் சாண்டி

’அஜித்துக்கே சவால் கொடுப்பாங்க கலா மாஸ்டர்!’ - நெகிழும் சாண்டி
’அஜித்துக்கே சவால் கொடுப்பாங்க கலா மாஸ்டர்!’ - நெகிழும் சாண்டி

’அஜித்துக்கே சவால் கொடுப்பாங்க கலா மாஸ்டர்!’ - நெகிழும் சாண்டி

ன் வாழ்நாளின் பெருங்கனவான சாண்டி டான்ஸ் ஸ்டூடியோ திறந்த பூரிப்பில் இருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. நண்பர்கள், நலம் விரும்பிகளின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தவரிடம் பேசினேன்.

’’என் நிஜப் பேர் சந்தோஷ் குமார். முதல் தடவை வெளிநாடு போயிட்டு வந்தேன். ’மச்சி... நீ ஃபாரின் ரிட்டர்ன்டா... இன்று முதல் நீ சாண்டி என அழைக்கப்படுவாய்’னு ஃப்ரெண்ட்ஸ் என் பேரை மாத்திட்டாங்க. பிறந்தது வளர்ந்தது சென்னை. அப்பா போலீஸ். என்னை வக்கீல் ஆக்கணும்னு கனவு கண்டாரு. ஆனா, நான் படிப்புல ஸீரோ. காலேஜுக்கு கூட சரியா போகாம டான்ஸ், டான்ஸ்னு சுத்திட்டு இருந்தேன். அப்போ திட்டினாங்க... ஆனா, இப்போ பெருமையா பார்க்கிறாங்க!

’அஜித்துக்கே சவால் கொடுப்பாங்க கலா மாஸ்டர்!’ - நெகிழும் சாண்டி

ஆர்வக்கோளாறுல டான்ஸ் ஆடிட்டு, முறைப்படி கத்துட்டு இருந்தேன். ஆனா, கலா மாஸ்டர்கிட்ட அசிஸ்டெண்ட்டா சேர்ந்த பிறகு ராக்கெட் வேகத்துல வாழ்க்கைல முன்னேற்றம். அவங்க கூட நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்துட்டு நிறைய கத்துக்கிட்டேன். அவங்கதான் மானாட மயிலாட ஷோவுல என்னை டான்ஸ் மாஸ்டரா மாத்தினாங்க. அந்த சீசன்ல நான் சிறந்த நடன இயக்குநர் விருதும் வாங்கினேன். அப்புறம் தொடர்ச்சியா மானாட மயிலாட, ஃபாரீன் ஷோனு ஷோக்கள். ஒரே டைம்ல பிருந்தா மாஸ்டர் கிட்டயும் அஸிஸ்டெண்டா வேலை செஞ்சேன்.

வெள்ளித்திரை எண்ட்ரீ எப்படி?

’அஜித்துக்கே சவால் கொடுப்பாங்க கலா மாஸ்டர்!’ - நெகிழும் சாண்டி

”அதுக்குக் காரணம் சிம்பு சார் தான். என்ன நீ ஏன் மாஸ்டராகக் கூடாதுன்னு கேட்டாரு. அப்படி அவர் 

குடுத்த வாய்ப்பு தான் ‘வாலு’ படத்தோட தாறுமாரு பாடல்... எம்.ஜி.ஆர், அஜித், சிம்பு இப்படி மூணு பேர் ஸ்டைலயும் எடுத்துட்டு வரணும். முதல் வாய்ப்பே எனக்கு ரொம்பப் பெரிய வாய்ப்பா என்ன நம்பி சிம்பு சார் குடுத்தாரு.. அப்பறம் இப்போ ‘கெத்து’ முட்ட பஜ்ஜி பாட்டு....அந்தப் பாட்டுக்கு முதல்ல பிரபுதேவா மாஸ்டர் கிட்ட கேட்டோம், அவரு கொஞ்சம் பிஸி நீங்க பண்ணிடுங்கனு சொன்னாரு திருக்குமரன் சார்! எனக்கு ஷாக். என்ன சார் இது பிரபு மாஸ்டர் பாட்டுக்கு நானான்னு கேட்டேன். இல்ல சாண்டி உன் மேல நம்பிக்கை இருக்கு நீ பண்ணு. உன் கிட்ட அந்தத் திறமை இருக்குன்னு சொன்னாரு அப்படி வந்த வாய்ப்பு. இப்போ பாட்டு செம ஹிட்!”

திடீர் விஜே ஆனீங்களே ....தொடர்ந்து பண்ணியிருக்கலாமே?

“அட நீங்க வேற அது ஒரு அசம்பாவிதம். திடீர்னு ஒரு சின்ன வாய்ப்புக் கிடைச்சது...நிறைய பேரு ஏம்பா நீ விஜே பண்ண வேண்டியது தானன்னு கேட்டாங்க.. நமக்கு டான்ஸ் தான் வாழ்க்கை. அது போதும். இன்னொன்னு லோக்கலா பேசிக்கிட்டு விஜே பண்ணா அதெல்லாம் கொஞ்ச நாளைக்கு ரசிப்பாங்க அப்பறம் என்னப்பான்னு போயிடுவாங்க!”

மீடியா, சினிமா என்ன சொல்லிக் குடுத்துச்சு?

”திறமை மட்டும் பத்தாதுன்னு சொல்லிக்குடுத்துச்சு.... தேடல் வேணும். அலையணும். வாய்ப்புக்காக காத்திருக்கணும். அதிர்ஷ்டம் இருக்கணும். அந்த அதிர்ஷ்டம் கூட தேடும் போது தான் கிடைக்கும். இதெல்லாம் இருந்தா தான் நமக்கான மேடை கிடைக்கும். ஏன்னா இன்னிக்கு நான் திறமையானவன்னு சொல்லிக்க மாட்டேன். என்ன விட திறமையான லட்சம் பேர் கோடம்பாக்கத்துல ஒரு வாய்ப்புக்காக அலைஞ்சிட்டு இருக்காங்க. இந்த ஃபீல்ட்ல வெறும் திறமை போதாதுங்க !”

உங்க டான்ஸ்ல ஒரு ஜாலி இருக்கே?

”நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை லோக்கல்ல தான்... உண்மைய சொன்னா ஏ கிளாஸ்னு சொல்லிக்குவோம். எல்லா ஏ.பி கிளாஸ் குள்ளயும் ஒரு சி கிளாஸ் இருக்கு அந்த சி கிளாஸ உள்ளருந்து எழுப்பணும் அதுதான் என்னோட டான்ஸ் குறிக்கோள்!”

எந்த ஹீரோவுக்கு டான்ஸ் பண்ணணும்னு ஆசை?

”ரெண்டு பேருக்கு...வேற யாரு, நம்ம தல தளபதிதான். அட சாண்டி தல தளபதிக்கு டான்ஸ் சொல்லிக் குடுத்துட்டான்டான்னு என்ன எல்லாரும் பார்த்து ஆச்சர்யப் படணும்!”

’அஜித்துக்கே சவால் கொடுப்பாங்க கலா மாஸ்டர்!’ - நெகிழும் சாண்டி

எந்த ஹீரோ, ஹீரோயின் நல்ல டான்ஸர்ஸ்?

”விஜய், சிம்பு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்.... செம டான்சர்ஸ் இவங்க நாலு பேரும்... அடுத்து சிம்ரன் தான். என்ன ஒரு டான்ஸர் அவங்க!”

திடீர்னு முழு நேர விஜேவாகணும்னு  கட்டாயமாக்கினா எந்த ஷோவ தொகுத்து வழங்குவீங்க?

”கலக்கப்போவது யாரு... சும்மா கலாய்ச்சு தள்ளிடலாம்!”

’அஜித்துக்கே சவால் கொடுப்பாங்க கலா மாஸ்டர்!’ - நெகிழும் சாண்டி

”பிடிச்ச விஜே யாரு!”

”சொல்லவே வேண்டாம் டிடி தான்... அப்பறம் ஜெகன் , ஈரோடு மகேஷ்!”

”சாண்டியின் ரொமாண்டிக் வாழ்க்கை எப்படி?”

“ அதுக்கும் நமக்கும் ரொம்ப தூரம்....என் கிட்ட ஒரு கெட்ட பழக்கம். எல்லாரையும் நம்பிடுவேன். என்ன செண்டிமெண்டால ஈஸியா கவுத்திடலாம்...லவ் மட்டுமில்ல நட்புலயும் எனக்கு நெருக்கமான நட்புகள் கம்மி தான். எல்லாரையும் நிறையா நம்பி ஏமாந்துருக்கேன். ஆனா இப்போ நானே ஒரு பொண்ணு கிட்ட என்னோட விருப்பத்த சொல்லியிருக்கேன்..காத்துட்டு இருக்கேன் அவங்க பதிலுக்காக!”

’’கலா மாஸ்டர் பத்தி யாருக்கும் தெரியாத ரகசியம் ஒண்ணு சொல்லுங்க..!’’

’’தல அஜித்துக்கு சவால் கொடுக்கிற அளவுக்கு கலா மாஸ்டர் பிரமாதமா சமைப்பாங்க. வீட்ல விசேஷம்னா அவங்களே சமைச்ச சிக்கன், மீன், மட்டன்லாம் தூள் பறக்கும். வெளுத்துக் கட்டுவோம். ஆனா, அவங்க ஆசை ஆசையா பரிமாறும்போது ’போதும்’னு மட்டும் சொல்லிடக்கூடாது. டென்ஷன் ஆகிடுவாங்க. ருசியா சமைக்கிறது மட்டுமில்லாம அதை ஆசை தீர சாப்பிட வைச்சு பார்க்கிறதுலயும் அஜித்தும் கலா மாஸ்டரும் ஒண்ணு. நான் கலைஞர் டிவியில இருந்து விஜய் டிவி போகும் போது மட்டும் செல்லமா கோவிச்சுக்கிட்டாங்க. ரெண்டு பேருமே கண் கலங்கிட்டோம்னு கூட சொல்லலாம். ஆனாலும் நான் நல்லா இருக்கணும்னு ஆசைப்படற ரொம்பச் சில உள்ளங்கள்ல அவங்கதான் முதல் ஆள்னு சொல்லுவேன்!’’

உங்க லைஃப்ல ரொம்ப முக்கியமான நபர் யாரு?

”கலா மாஸ்டர் , இன்னொன்னு என்னோட அம்மா ஸ்தானத்துல இருந்து உன்னால முடியும்னு சொல்லிக்குடுத்த பொன்மணி அம்மா. என்னோட ரிலேஷன் அவங்க. அவங்களுக்கு நான் மானசீகமா நன்றி சொல்லணும். அதுக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு!” ’’

’அஜித்துக்கே சவால் கொடுப்பாங்க கலா மாஸ்டர்!’ - நெகிழும் சாண்டி

”‘எப்பதான்டி வரப்போற வாட்ஸப்புல” இப்படி யார் கிட்ட கேட்க ஆசை?”

” மானசீகமா கேட்கணும்னா என் லவ்வர்... ஜாலியா கேட்கணும்னா பிரியங்கா சோப்ரா!”

- ஷாலினி நியூட்டன் -

அடுத்த கட்டுரைக்கு