Published:Updated:

சன்னி லியோன் படம் ஓடிய தியேட்டர் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு! (வீடியோ)

சன்னி லியோன் படம் ஓடிய தியேட்டர் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு! (வீடியோ)
சன்னி லியோன் படம் ஓடிய தியேட்டர் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு! (வீடியோ)

லூதியானா:  நடிகை சன்னி லியோன் நடித்துள்ள 'மஸ்திசாதே' ஹிந்தித் திரைப்படத்தைத் தடை செய்ய கோரியும், ஆபாசமான கதைக் காட்சிகள் கொண்ட அந்தப் படத்தை திரையிடக் கூடாது என்று வலியுறுத்தியும் பஞ்சாப்பில் இந்து அமைப்பினர் தியேட்டர் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

பஞ்சாப் மாநில வம்சாவளி பெண்ணான சன்னி லியோன்,  அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். அங்கு பல்வேறு ஆபாசப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு ஹிந்தித் திரைப்பட உலகில் நடிகையாக அறிமுகம் ஆகி பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி,  அவரின் நடிப்பில் 'மஸ்திசாதே' என்ற திரைப்படம்,  சென்னை உட்பட உலகம் முழுவதும் வெளியானது. 

இந்தப் படம்,  முற்றிலும் ஆபாசம் மற்றும் வல்காரிட்டி காமெடிகள் நிறைந்ததுள்ளதாக உள்ளது என்று கூறி,  பஞ்சாப் மாநிலத்தின் 'ஹிந்து நியா பீத்' அமைப்பினர் லூதியானா நகரில், "மஸ்தி சாதே" திரையிடப்பட்டுள்ள தியேட்டரை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர். படத்தை திரையிடக் கூடாது என்று முழக்கங்களை எழுப்பிய ஹிந்து அமைப்பினர், தியேட்டரை அடித்து நொறுக்கவும் முயன்றனர்.அதனால் அங்கு பதற்றம் நிலவியது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்தி நிறுத்தி அனுப்பினர்.சன்னி லியோன் திரைப் படத்திற்கு எழுந்துள்ள இந்த எதிர்ப்பு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.