Published:Updated:

ஜீவானந்தம் !

ஜீவாவுக்கு இன்று (ஜனவரி 04 ) பிறந்த நாள். அவருக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

2012ம் ஆண்டில் வெளிவரும் அதிக  படங்களில் நடித்தவராக் ஜீவா இருக்கலாம்.  2012ல் ஷங்கரின் 'நண்பன்', கெளதம் மேனனின் 'நீதானே என் பொன்வசந்தம்', மிஷ்கினின் 'முகமூடி', சரண் இயக்கத்தில்  'வாட்டசாட்டம்', அகமது இயக்கத்தில் ஒரு படம், ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுடன் இணைந்து ஒரு படம் என வரிசையாக நடித்து வருகிறார்.

அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்திற்கு நாயகி தேர்வுப் படலம் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. ஜீவாவிற்கு ஜோடியாக முன்னணி நாயகிகள் 5 பேரில் யாரை தேர்வு செய்யலாம், யார் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார்கள் என தீவிர ஆலோசனைக்கு பிறகு த்ரிஷா பெயரை டிக் அடித்திருக்கிறார்கள்.

கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ள கதையாம் இது. எனவே த்ரிஷா இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது நடந்தால், ஜீவா த்ரிஷா இணைந்து நடிக்கும் முதல் படமாக அது இருக்கும். அடுத்தடுத்து வெவ்வேறு படக்குழுவுடன் இணைந்து, வகை வகையான படங்களில் நடிப்பதால் ஜீவா ஆனந்தமாக இருக்கிறார்.