Published:Updated:

நானா நீரா ? : கார்த்தி

கார்த்தி, ப்ரணீதா நடித்து வரும் படம் 'சகுனி'. ஷங்கர் தயாள் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானபோது தான் இந்தியாவில் 2G விவாகரத்தில் அரசியல் தரகர் நீரா ராடியா பெயர் சேர்க்கப்பட்டது. 'சகுனி' படத்தின் போஸ்டர்கள் மற்றும் FIRST LOOK TEASER ஆகியவை வெளியான போது 'ஆண் நீரா ராடியா'  கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்து இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

படத்தின் FIRST LOOKலிம் கார்த்தி வெவ்வேறு வேடத்தில் வந்து போவது இருந்ததால், அரசியல் தரகர் பாத்திரத்தில் தான் கார்த்தி நடித்து இருக்கிறார் என்று பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து கார்த்தி " நீரா ராடியா குறித்து இப்படத்தில் எதுவுமே இல்லை.  'சகுனி' ஒரு அரசியல் சார்ந்த கதையுள்ள படம் அவ்வளவுதான். படம் முழுவதும் நான் அரசியல்வாதியாக நடிக்கவில்லை. படத்தின் பின் பாதியில் தான் அரசியலுக்கு வருவதாக கதை அமைந்துள்ளது.

படத்தில் நான் ஒரு சாதாரண கிராமத்து இளைஞனாக நடிக்கிறேன்.  அவன் நகரத்திற்கு வந்தவுடன் எப்படி அரசியலுக்குள் இழுக்கப்படுகிறான், அதனால் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.  " என்று தெரிவித்துள்ளார்.