Published:Updated:

மறுபடியும் மங்காத்தா!

2011ம் ஆண்டு அஜீத் நடிப்பில் வெளிவந்த படம் மங்காத்தா. அஜீத்தின் 50வது படம் மற்றும் 2011ம் ஆண்டில் அதிக வசூல் அள்ளிய படம் என்ற பெருமையை பெற்றது.

அஜீத், அர்ஜுன், த்ரிஷா, லட்சுமிராய், வைபவ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்த இப்படத்தினை இயக்கினார் வெங்கட்பிரபு. தயாநிதி அழகிரி தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

2011 ஆண்டு இறுதியில் வெளிவந்த படங்களில் 'மெளனகுரு' படத்தினை தவிர எந்த ஒரு திரைப்படமும் வரவேற்பை பெறவில்லை.

2011ம் ஆண்டில் மங்காத்தா படம் தான் வசூலில் முதல் இடம் என்று கூறியதால் 'மங்காத்தா' படத்தினை இப்போது 2012-ல் மறு வெளியீடு செய்து இருக்கிறார்கள் சில திரையரங்க உரிமையாளர்கள்.