Published:Updated:

அதுல கெஸ்ட்.. இதுல ஹீரோ !

வித்யா பாலன் நடிப்பில் இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ' THE DIRTY PICTURE '. ஒரு நடிகையின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சொன்னது அப்படம். அப்படத்தினை போலவே தமிழில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'ஒரு நடிகையின் வாக்குமூலம்'.

இப்படத்தில் சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ராஜ்கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் அடுத்ததாக ராஜ்கிருஷ்ணா இயக்கும் மற்றொரு திரைப்படத்தில் நாயகியாக நடிக்க மீண்டும் ஒப்பந்தமாகி இருக்கிறார் சோனியா அகர்வால்.

அப்படத்திற்கு 'அச்சமென்ன' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.  ஒரு நடிகையின் வாக்குமூலம் பட குழுவினர் அனைவருமே இப்படத்திலும் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள்.

'ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தில் கெளரவ வேடத்தில் நடித்த ஜித்தன் ரமேஷ், இப்படத்தின் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.