Published:Updated:

'வல்லினம்' மிருதுளா !

ஆதி மற்றும் நந்தா நடித்த ' ஈரம் ' படத்தினை இயக்கியவர் அறிவழகன். வித்தியாசமான கதை களத்தை கொண்ட 'ஈரம்' படத்திற்குப்  பிறகு அறிவழகனின் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் நகுல், பிந்து மாதவி நடிக்க 'வல்லினம்'  என்னும் படத்தினை இயக்கி வந்தார் அறிவழகன். சில நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் பிந்து மாதவி  பாத்திரத்திற்கு பொருந்ததால்  படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் 'வேலாயுதம்' படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரித்ததால், 'வல்லினம்' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இவ்வாறு பல தடைகள் ' வல்லினம் ' படக்குழுவினருக்கு ஏற்பட்டது.

'வேலாயுதம்' படத்தின் வரவேற்பு 'வல்லினம்' படக்குழுவினருக்கு புதுத்தெம்பு அளித்துள்ளது. தற்போது நாயகியாக புதுமுகம் மிருதுளாவை  ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

மிருதுளா 3 வயதில் இருந்தே பரதநாட்டியம் கற்று வருகிறாராம். ஆகையால் இப்படத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று கருதுகிறார்கள். 'வல்லினம்' படத்தின் FIRST LOOK-ஐ  இந்த மாதம் வெளியிட தீர்மானித்து இருக்கிறது படக்குழு.