Published:Updated:

டார்லிங் 2 படத்தில் சிவகார்த்திகேயன்

Vikatan Correspondent
டார்லிங் 2 படத்தில் சிவகார்த்திகேயன்
டார்லிங் 2 படத்தில் சிவகார்த்திகேயன்

 2015 ஆம் வருடம் பொங்கலன்று ஐ, ஆம்பள ஆகிய படங்களோடு வெளியாகி  வெற்றியைப் பெற்ற படம் டார்லிங்.  

அதுவரை இல்லாத அளவுக்கு மிக ஏராளமான பொருட்செலவில் உருவான ஒரு படத்தோடு சேர்ந்து திரைக்கு வந்து,  டார்லிங் படம் வெற்றி பெறக் காரணம் அப்படத்தின் தயாரிப்பாளர்  ஞானவேல் ராஜா தான் என்று சொல்வார்கள்.  அவர், தற்போது ஜின் என்ற பெயரில் உருவான  படத்தை  டார்லிங் 2 என்று பெயர்  மாற்றி வெளியிடவிருக்கிறார்.

டார்லிங் 2 படத்தில் சிவகார்த்திகேயன்

சதிஷ்சந்திரசேகரன் இயக்கியிருக்கும் இந்தப்படம், ஐந்து நண்பர்கள் பேய் பிடித்த ஒரு நண்பனோடு சேர்ந்து ஒரு பயணம் போகிறர்கள் என்கிற அடிப்படைக் கதையைக் கொண்டது.

ஒவ்வொரு காட்சியிலும் திகிலோடு நகைச்சுவையும் பின்னிப் பிணைந்து அமைக்கப்பட்ட திரைக்கதை , மெட்ராஸ் புகழ் கலையரசன்,மற்றும் காளி வெங்கட், அர்ஜுன் , முனீஸ்காந்த் , 'மெட்ராஸ்' ஜானி போன்றவர்களோடு அறிமுகங்களான ரமீஸ் ராஜா மற்றும் மாயா .. என்று திறமை மிக்க கலைஞர்களின் கூட்டணி  ஆகியனவற்றைக் கொண்ட  ஜின் படத்தின் பெயரை டார்லிங் -2 என்று மாறுவது பற்றிய யோசனை சிறு தயக்கமும் இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் பெயரை மாற்றிவிட்டார்கள்.
சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.  விரைவில் படத்தை வெளியிடும் வேலைகளில் இருக்கிறார்கள். இப்படத்தின் விளம்பரத்துக்காக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் பாடலை இன்று வெளியிடவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.