இவரையும் விட்டுவைக்கலையா இளையராஜா?

தோ ஒரு பள்ளிக்கூட அறை. பிரம்பும், சாக்பீஸும், டஸ்டரும், நோட்டுப் புத்தகமும் இருக்கிறது.

இப்போது ஒருவர் நடந்து வருகிறார். வெளிநாட்டுக்காரர். 

உடைந்த தமிழில் பேசுகிறார்.

‘நமஸ்காரம்.. என் பேரு மத்தி..’ என்று ஆரம்பித்து தமிழிலேயே பேசுகிறார். அவர் எப்படித் தமிழ் பேசுகிறார் என்பதற்கு, பின்னால் போர்டில் குழந்தைக் கையெழுத்தில் இருக்கிற இரண்டு பாடல்களின் ஆரம்ப வரிகள் பதில் சொல்கிறது..

‘ஆகாய கங்கை’

‘மண்ணில் இந்தக’

இரண்டுமே இளையராஜாவின் பாடல்கள். கடல் கடந்தும், தமிழரல்லாத  ஒருவரை தமிழ் பேச வைத்தது இசையன்றி வேறு எதுவாக இருக்கும்?

‘இளையராஜா பிடிக்கிறது’ என்ற அவரது கூற்றே அதை உறுதிப்படுத்துகிறது. .தொடர்ந்து, 'ஆகாய கங்கை'  பாடலை ஒருவரி விடாமல் பாடுகிறார். முடிந்ததும் போர்டில் இருக்கிற ‘ஆகாய கங்கை’க்கு அருகில் OK போட்டுவிட்டு, ஒரும் மிடறு காஃபி குடித்துவிட்டு மண்ணில் இந்தக் காதலின்றி பாடுகிறார்.

இரண்டு பாடல் பாடி முடித்ததும், ஒரு தம்ஸ் அப் காட்டிவிட்டுப் போகிறார். அவரே போய் கேமராவை ஆஃப் செய்கிறார்.

இசை ஏதும் இல்லை. நம் ஜட்ஜ்கள் சொல்கிற சுருதி, லயம், தாளம், சங்கதி போன்ற சமாச்சாரங்கள் இல்லை. இருப்பதெல்லாம் அவருக்கு இசை மீதிருக்கிற காதல் மட்டுமே. ’என் தமிழ் நண்பனுக்கு இளையராஜா பிடிக்கும். அவர் மூலமாக நானும் ராஜா இசை கேட்க ஆரம்பித்தேன். இப்போது எனக்கும் இளையராஜா பிடிக்கும்’ என்றிருக்கிறார்.

கடல் கடந்து மொழிதெரியாத ஃபின்லாந்துக்காரரை  இளையராஜா கவர்ந்திழுக்க என்ன காரணம்?

ஒன்றே ஒன்றுதான். ஒரே ஒரு ஊர்ல.. அல்லல்ல.. உலகத்துக்கே அவர்தான் ராஜா என்பதே அது! 

வீடியோ...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!