Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறுதிச்சுற்றை Knock-Out செய்கிறதா விசாரணை...?

னவரி 29ம்தேதி வந்து, பொதுமக்களின் ஏகோபித்த பாராட்டு மழைகளைப் பெற்ற படம், இறுதிச்சுற்று.

நான்காண்டுகளுக்குப் பிறகு மாதவன். சாக்லேட் பாய் என்கிற இமேஜ் இல்லை. 2010ல் மன்மதன் அம்பு, குரு என் ஆளு. 2012ல் வேட்டை. விளம்பரத்தில் பார்த்து அவரை மறக்காமல் வைத்திருந்தார்களேயன்றி, அவருக்கென்று ஒரு மார்க்கெட் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஹிந்தித் திரையில் அவர் பிஸி என்று A, B செண்டர் ரசிகர்கள் வரைதான் தெரியும். ‘நம்ம பயடா ’ என்கிற இமேஜ் மட்டுமே தமிழர் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு உண்டு.

நாயகி? படம் வந்தபிறகுதான், ரித்திகா சிங் என்று தெரியும். மற்றபடி அவர் ஒரு புதுமுகம்.

ரசிகைகள், ஆர்யா, அதவர்வா என்று தங்கள் ரசனை வண்டியின் கியரை வேறு லெவலுக்கு விரட்டிவிட்டுக் கொண்டிருக்க, ரசிகர்கள், நயன்தாரா, ஹன்சிகா என்று மாய்ந்து மாய்ந்து லைக் பட்டனைத் தட்டிக் கொண்டிருந்தனர். இயக்குனர், யாரோ சுதா கொங்கரா. அவர் யார், என்ன என்பதே படம் வெளிவருவதற்கு ஒரு வாரத்துக்கு முன் அவ்வளவாகப் பேச்சில்லை.


டவெளியீட்டுக்கு முன், படத்தை ப்ரமோட் செய்த ஒரே நபர் சந்தோஷ் நாராயணன். எப்படி 'சிக்குபுக்கு ரயிலே', ஜெண்டில்மேன் படத்துக்கு விசிட்டிங் கார்டாய் அமைந்ததோ, அதே போல சந்தோஷ் நாராயணனின் ‘வா மச்சானே மச்சானே’ பாடலும், டிவிக்களில் வெளியாகிய அந்தப் பாடலில் ரித்திகா போட்ட குத்தாட்டமும் ‘யார்றா இது’ என்று படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டு வந்தது.

அதை நம்பி, படத்துக்குப் போன ரசிகர்களை ஏமாற்றவில்லை படம். கனமான ஒரு சப்ஜெக்ட். இன்றைய தேதியில் நாம் பேசவேண்டிய ஒரு கதை. பெண்கள், விளையாட்டுக் களத்தில் படும் அவஸ்தைகள். அதைத் தாண்டி அவர்களின் திறமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல எத்தனை பாடுபடுகிறார்கள் என்று பேசுகிற படம். இதை ஒரு பாக்ஸிங் வீராங்கனை படும் அவஸ்தையாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. ஒரு ஊழியை, பல மேனேஜர்களைத் தாண்டி நல்ல மேனேஜர் வாய்க்கப் பெற்றுத், தன்னை நிலை நிறுத்திக் கொள்வதாகக் கொள்ளலாம். ஒரு நடிகை, சில பல இயக்குனர்களைத் தாண்டி தன் திறனை வெளிப்படுத்தும் இயக்குனர் கையில் கிடைத்து நம்பர் ஒன் ஆவதாகக் கொள்ளலாம். ஒரு குடும்பத்தலைவி, தன் இன்-லாக்கள் சிக்கல்களைத் தாண்டி நல்ல கணவன் வாய்க்கப் பெற்று.. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

கதை, திரைக்கதை, இசை, வசனம் என்று ஒருவிதத்திலும் குறைவைக்கவில்லை படம்.

ஆனால்...

ஒரே வாரம்.

ஃபிப்ரவரி 5ல் வெளியாகிறது விசாரணை. தனுஷ் தயாரிப்பு. வெற்றிமாறன் இயக்கம். ஏற்கனவே பல ஃபிலிம் ஃபெஸ்டிவல்களுக்குப் போய் வந்து ஊரே கொண்டாடிக் கொண்டிருக்கிற படம். படத்தைப் பார்த்துவிட்டு  மிஷ்கின், தன் வீட்டு மொட்டை மாடியில் மணிரத்னம், பாலா, ஷங்கர், கே.வி.ஆனந்த் உட்பட என்று ஜாம்பவான்களையெல்லாம் அழைத்து ஒரு ஷோ போட்டுக் காட்டி, அனைவரும் புகழ்ந்த படம். பட ரிலீஸுக்கு முன், மணிரத்னம், ரஜினி என்று லெஜண்ட்களின் பாராட்டு மழை பேப்பர் விளம்பரங்களில் மின்ன, படம் ஆர்ட் ஃப்லிம் என்கிற வண்ணத்திலிருந்து, கமர்ஷியலாகவும் இறங்கி அடிக்கத் தயாராய் ரிலீஸாகிறது.இந்தப் படமும், ரசிகர்களை ஏமாற்றவில்லை. குறையொன்றுமில்லை என்றாலும்..இப்போது யோசித்தால்...

இறுதிச்சுற்று, கொண்டாடப்பட வேண்டிய அளவு கொண்டாடப்பட்டு விட்டதா? இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தாலும், இன்னும் அது ஜெயித்திருக்க வேண்டிய படமோ என்றெல்லாம் கேள்விகள்.

படத்தின் ஒரு காட்சியில், இரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் ரித்திகாவை, அர்த்தராத்திரியில் சக பாக்ஸர் பெண் அழைப்பாள்.

‘கோச் கூப்பிடறார்’

போனால், ரித்திகாவின், உதட்டைத் தடவி... பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க, அவரை தாக்கிவிட்டுக் கோபமாக வெளியே வருவாள் நாயகி.

வெளியே நிற்கிற அந்தப் பெண், ‘என்ன இப்படி சிலுத்துக்கற? வெறும் திறமையை மட்டும் வெச்சுட்டு ஜெயிச்சுடலாம்னு நெனைக்காத. உங்க அக்காவைக் கேட்டுப்பாரு’ என்று அவர் சொல்கிற வசனத்திற்குப் பின்னால் இருக்கும் பலரின் வலி, இன்னும் இன்னும் பேசப்பட்டிருக்க வேண்டாமா? ஒரு திறமையான, முரட்டுத்தனமான கோச் தன் நேர்மையின் காரணமாகப் பந்தாடப்படுவது, இன்னும் விவாதப் பொருளாக்கப்பட்டிருக்க வேண்டாமா? பிரபு செல்வராஜாக வரவேண்டிய பலர், பஞ்ச் பாண்டியன்களாக ஏதோ ஒரு கூடாரத்தைக் கூட்டிப்பெருக்கிக் கொண்டிருப்பது போகிற போக்கில் விட்டு விடுகிற விஷயமா?

 

படத்தைத் தாண்டி, ஒரு ரியல் பாக்ஸரான ரித்திகா, நடிப்புப் பயிற்சி பெற்று அநாயாசமாக நடித்தது, நடிகரான மாதவன், இந்தப் படத்திற்காக பாக்ஸிங் பயிற்சி பெற்று, தோற்றத்தில், உடல்மொழியில் அதைக் கொண்டு வந்தது, இதன் டீட்டெய்லிங்கிற்காக இயக்குநர் சுதா கொங்கரா பெண் பாக்ஸர்களை நேரில் சந்தித்து தகவல்கள் திரட்டியது எல்லாமே.. எல்லாமே ஒரு வாரக் கொண்டாட்டத்திற்கு மட்டும்தானா?

“துரோகி படத்துல என்ன தப்பு பண்ணீருந்தீங்க?” என்று இயக்குநர் சுதா கொங்கராவைக் கேட்டபோது, ‘அந்தப் படம் ரிலீஸ் பண்ண நேரம் சரியில்லாமப் போயிருக்கலாம். கூடவே வந்த பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு நிறைய எதிர்பார்ப்புகள். அதுக்கடுத்து,  இரண்டே வாரத்தில் ஷங்கர் - ரஜினி காம்போவில் எந்திரன்.. அதுனாலகூட படம் பேசப்படாமல் போயிருக்கலாம். சினிமா எந்த நேரம் என்ன செய்யும்னு யாருக்கும் தெரியாது’ என்றார்.

இப்போதும், அதே தவறு மீண்டும் நிகழ்ந்துவிட்டது. விசாரணை வந்து, இறுதிச்சுற்றை மறக்கடித்துவிட்டதெனத் தோன்றுகிறது. பாக்கியை, பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் -தான் சொல்ல வேண்டும்.

பரிசல் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?