Published:Updated:

அசால்ட் ஸ்ரீ, அவமான ஹரீஷ், க்யூட் சாந்தினி சுவாரஸ்ய வில்அம்பு - விமர்சனம்

அசால்ட் ஸ்ரீ, அவமான ஹரீஷ், க்யூட் சாந்தினி சுவாரஸ்ய வில்அம்பு - விமர்சனம்
அசால்ட் ஸ்ரீ, அவமான ஹரீஷ், க்யூட் சாந்தினி சுவாரஸ்ய வில்அம்பு - விமர்சனம்

அசால்ட் ஸ்ரீ, அவமான ஹரீஷ், க்யூட் சாந்தினி சுவாரஸ்ய வில்அம்பு - விமர்சனம்

இரண்டு கதாநாயகர்கள் இருந்தால் அவர்களுக்குள் மோதல் அதன்பின் நட்பு அல்லது முதலில் நட்பு பிறகு மோதல் என்றுதான் திரைக்கதை இருக்கும். இவை இரண்டும் இல்லாமல் இரண்டு தனித்தனிக்கதைகளை வைத்துக்கொண்டு அதற்கு தத்துவார்த்தமாக ‘உலகில் நடக்கும் எல்லாச் செயல்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது’ என்பதை இந்த இருவரின் கதைகளின் மூலம் சொல்லியிருக்கும் படமே வில் அம்பு. 

அசால்ட் ஸ்ரீ, அவமான ஹரீஷ், க்யூட் சாந்தினி சுவாரஸ்ய வில்அம்பு - விமர்சனம்

டைட்டில் வாய்ஸ் ஓவர்:

நம் வாழ்க்கையை நாம் மட்டும் தீர்மானிப்பதில்லை வேறு பலரும் தீர்மானிப்பார்கள் அவர்கள் நம் உறவினர் மற்றும் நண்பர்களாக இருக்கவேண்டுமென அவசியமில்லை நமக்கு அறிமுகமில்லாத, முகம் தெரியாத யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற விளக்கத்தோடு டைட்டில் நகர்கிறது.

கதை 01:


கோவையில்  குடிசைப்பகுதியில் வசிக்கும் ஒரு நாயகன் ஸ்ரீ (கார்த்தி), சின்னச்சின்ன திருட்டு கொள்ளைகளைச் செய்துகொண்டு போலீஸில் மாட்டி அசால்டாக எஸ்கேப்பாகும் ஜாலி பாய். உள்ளூர் அரசியல் பிரமுகர் மகளுக்கு ஸ்ரீ மேல் காதல், அதனால் நடக்கும் சிக்கல்கள் என்ன?, காதலியாக செம் க்யூட்டாக வரும் சம்ஸ்ருதிக்காக திருட்டை விட்டு திருந்தி வாழ முயற்சி செய்யும் ஸ்ரீ, அவனின் நண்பனாக வசனங்களில் தெறிக்கவிடும் யோகிபாபு இவர்களைச் சுற்றியானதே முதல் கதை. 

கதை 02:

அதே கோவையில், அதே ஏரியாவில் நடுத்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த இன்னொரு நாயகன் ஹரிஷ் கல்யாண் (அருள்). அவருடைய உணர்வுகள் மற்றும் ஆசைகளைக் கொஞ்சமும் புரிந்துகொள்ளாத அப்பா. மகனுடைய விருப்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய எண்ணத்துக்கேற்ப மகன் இருக்கவேண்டும் என்று நினைக்கிற சந்தோஷ்சுப்பிரமணியம். அப்பா மீதுள்ள கோபத்தால் சில அவமானங்களைச் சந்திக்கிறார், காதலியை இழக்கிறார், அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார்? அவருக்கும் அப்பாவுக்குமான உறவு என்னவானது என்பது இன்னொரு கதை.

பிளாக்கில் டிக்கெட் விற்பது கஞ்சா கடத்துவது போன்ற வேலைகளைச் செய்து கொண்டு அலப்பறையாகத் திரியும் ஸ்ரீ, வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். அடிதடிகள் மட்டுமின்றி காதல் காட்சிகளிலும் சோடை போகவில்லை ஸ்ரீ. அவரைக் காதலிக்கும் புதுவரவு சம்ஸ்கிருதி கச்சிதம். யோகிபாபு வருகிற காட்சிகள் ராக்ஸ்.

அசால்ட் ஸ்ரீ, அவமான ஹரீஷ், க்யூட் சாந்தினி சுவாரஸ்ய வில்அம்பு - விமர்சனம்

“கலவரம் பண்ணாத கார்த்தி”

“நீ என்னை அவமானம் செஞ்சிட்ட நண்பா”


- என்று யோகிபாபுவின் டைலாக்குகள் ரசிக்கவைக்கின்றன.

இன்னொரு நாயகன், ஹரிஷ்கல்யாண் , நடுத்தரவர்க்க இளைஞர்களின் பிரதிநிதியாக இருக்கிறார். தன்னுடைய ஆசைகளைப் புதைத்துக்கொண்டு அப்பாவுக்காக வாழ்வதும் அதை எண்ணிப் புழுங்கும் காட்சிகள் ஒகே. அப்பாவாக, ஹரிஷின் சொந்த அப்பா கல்யாணே நடித்திருக்கிறார்.

ஹரிஷ் காதலி சிருஷ்டிடாங்கே, அவருடன் ஒரு பாடல் பாடிவிட்டு அவருக்குச் சிக்கல் வந்ததும் அப்பா பார்க்கும் மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு போகிற மிடில்கிளால் பெண். இன்னொரு காதலியாக வரும் சாந்தினியின் வேடம் வரவேற்பு பெறுகிறது. இவ்விருவரையும் வைத்துக்கொண்டு நடுத்தரவர்க்க மனநிலையையும் அடித்தட்டு மக்கள் மனநிலையையும் நன்றாக வேறுபடுத்திக்காட்டியிருக்கிறார் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியன்.

அசால்ட் ஸ்ரீ, அவமான ஹரீஷ், க்யூட் சாந்தினி சுவாரஸ்ய வில்அம்பு - விமர்சனம்

இவ்விரு கதைகளில் ஒருவர் கதையில் நடக்கும் திருப்பங்களுக்கு இன்னொருவர் மறைமுகமாகக் காரணம் ஆகிறார் என்பதுதான் இந்தக்கதையில் இயக்குநர் சொல்ல வருகிற செய்தி. ஆனால் அதை முழுமையாக சொல்லவில்லை என்பது கூடுதல் செய்தி.

வில்லனாக நடித்திருக்கும் போஸ்டர் நந்தகுமார் வேடப்பொருத்தம் கச்சிதம். படத்தில் பெரும்பாலோனோர் கொங்குத்தமிழ் பேசிக்கொண்டிருக்க இவர் மட்டும் அக்மார்க் சென்னைத்தமிழ் பேசிக்கொண்டிருப்பது தான் ஏன் என்று தெரியவில்லை. நவினின் இசையில் அனிருத் பாடும் “ஆள சாச்சுப்புட்ட கண்ணாலே” பாடல் செம. மார்டின்ஜோ வின் ஒளிப்பதிவு கோவை நகரத்தைச் சுற்றிச்சுற்றி வந்திருக்கிறது.

இருவர் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் துண்டு துண்டாக இருக்கின்றன. ஹரிஷ்கல்யாணைக் கைது செய்த பின்பு காவல்துறை அந்த வழக்கை அப்படியே விட்டுவிடுமா? ஹரீஷின் குடும்பத்தினரும் அதுபற்றிக் கவலைப்படமாட்டார்களா? கஞ்சா விற்று மாட்டிக்கொள்ளும் ஸ்ரீயை போலீஸ் அப்படியே விட்டுவிடுவது போன்று நிறையக் கேள்விகள் எழுவது திரைக்கதையின் பலவீனம். இரண்டு தனித்தனிக்கதைகளுக்கு இடையே இருக்கும் இணைப்புப்புள்ளிகளும் முழுமையான நம்பிக்கைக்கு உரியதாக இல்லை.

அசால்ட் ஸ்ரீ, அவமான ஹரீஷ், க்யூட் சாந்தினி சுவாரஸ்ய வில்அம்பு - விமர்சனம்

அடித்தட்டு மக்களின் வாழ்க்கை, ஸ்ரீயின் அப்பா, அம்மா அவர்கள் வாழ்க்கை முறை, அந்தப்பகுதியைச் சேர்ந்த நாயகி சாந்தினி ஆகியோர் வருகிற காட்சிகள் படத்தை ரசிக்க வைக்கிற அளவுக்கு ஹரிஷ் சுற்றியான கதை அமையவில்லை.

ஆனாலும், இரு நாயகர்களுக்கிடையேயான கதையில், இருவருமே சந்தித்துக் கொள்ளாமல் ஒருவர் செயலால் மற்றவர் எப்படி பாதிக்கப்படுகிறார் என்கிற சுவாரஸ்ய ஒன்லைனரை யோசித்த விதத்திற்காக ஒரு லைக் போடலாம்!

அடுத்த கட்டுரைக்கு