Published:Updated:

விஜய் சேதுபதியோட அந்தக் காதல்.. சான்ஸே இல்ல! - ரம்யா நம்பீசன் பேட்டி

விஜய் சேதுபதியோட அந்தக் காதல்.. சான்ஸே இல்ல! - ரம்யா நம்பீசன் பேட்டி
விஜய் சேதுபதியோட அந்தக் காதல்.. சான்ஸே இல்ல! - ரம்யா நம்பீசன் பேட்டி

"மலையாளத்துல இருந்து தமிழுக்கு எப்படி?"

"தமிழ்ல ஒருநாள் ஒரு கனவுதான் என் முதல் படம். அதுல சங்கீதம் தெரிஞ்ச மாதிரியான ஆள் வேணும்னு ஃபாசில்சார் என்னை, தங்கச்சியா நடிக்க வெச்சார். அப்பறம் சேரன் சார், என் மலையாளப் படங்களெல்லாம் பார்த்துட்டு ‘ராமன் தேடிய சீதை’ல ஹீரோயினா நடிக்க வெச்சார். அப்பறம் குள்ள நரிக்கூட்டம், பீட்சான்னு நெறைய பண்ணினேன்.

“நடிகையா உங்களை தெரியற விட, உங்க பாட்டு இங்க ஹிட். நீங்க பாடின, ‘ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை’, ‘ஹிட்டு சாங்கு மாமா’... . ஓகே.. பாடகி ரம்யா நம்பீசன் பத்திச் சொல்லுங்க”

“இவன் மேகரூபன்’ங்கற படத்தோட ப்ரொமோஷனுக்காக ஒரு பாட்டு ரெடி பண்ணி கொச்சின்ல ரோட்ல பாடினோம். அது ஹிட்டாகி, அப்பதான் நான் லைம்லைட்ல வந்தது.”

விஜய் சேதுபதியோட அந்தக் காதல்.. சான்ஸே இல்ல! - ரம்யா நம்பீசன் பேட்டி

 “மலையாளத்துல யார் யார்கூட நடிச்சிருக்கீங்க?”

“ஜெயராம் சார் தான் ஃபர்ஸ்ட் ஹீரோ. ப்ருத்விராஜ், ஃபகத் ஃபாசில்னு பலர் கூட நடிச்சிருக்கேன். இப்ப மோகன்லால் கூட ஒரு படம் கெஸ்ட்ரோல்ல பண்ணீருக்கேன்.”  

“தமிழ்ல உங்களுக்கு ஓபனிங்னு என்ன படம் சொல்லுவீங்க?”

 “ராமன் தேடிய சீதை, மக்களுக்குப் பிடிச்சிருந்தாலும் குள்ளநரிக்கூட்டம்தான் வெளில பலர் பாத்து சொன்னது. அப்பறம் பீட்சா வந்து பலரும் அடையாளம் கண்டுகிட்டாங்க”

‘பீட்சா’ விஜய் சேதுபதிக்கும், ‘சேதுபதி’ விஜய் சேதுபதிக்கும் என்ன வித்தியாசம்?”

“ஃபேன் ஃபாலோயிங்ல இப்ப அவர் வேற லெவலுக்குப் போய்ட்டார். ஆனா பீட்சா வெறும் ஒரு வாரம்தான் ஷூட். சேதுபதி ஷூட்டிங்லதான் நானும் அவரும் நிறைய பேசினோம். ஒரு பெர்சனா அவர் ரொம்ப ஜென்யூன், மனித மதிப்புகளுக்கு முக்கியத்துவம் குடுக்கறவர். இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம், சினிமா மேல அவருக்கு இருக்க அளவுகடந்த காதல்தான். அவ்வ்வ்வ்ளோ ரசிச்சு, உள்வாங்கி அவரோட கேரக்டரை செய்றார்”

“பீட்சால பயந்து நடிச்ச ஹீரோ, இதுல போலீஸ்..”

“இதுலயும் பயந்துட்டுதான் இருப்பார். படம் பார்த்தீங்கன்னா தெரியும்”

“டைரக்டர்?”

“அருண் எப்படியாவது பேசி வேலை வாங்கற ஆளு. எந்த இடத்துலயாவது நான் நல்லா பண்ணீருக்கேன்னு உங்களுக்கு தோணிச்சுன்னா, அது அவராலதான்”

விஜய் சேதுபதியோட அந்தக் காதல்.. சான்ஸே இல்ல! - ரம்யா நம்பீசன் பேட்டி

“ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நடிச்சிருக்கீங்களே”

“இங்கயும் காக்காமுட்டை ஐஸ்வர்யா மாதிரி பலர் அப்டி நடிக்கறாங்களே.. நம்ம பண்ற வேலைக்கு, நமக்குத் தகுந்த ஸ்கோப் இருந்தா எதுனாலும் பண்லாம்”

”சேதுபதில நீங்க ரசிச்சுப் பண்ணின விஷயம்”

“ஃபேமலி போர்ஷன்ஸ் எல்லாமே ரொம்ப ரசிச்சுப் பண்ணினோம். பார்க்கறப்பவே உங்களுக்கு ‘நல்ல ஃபேமலி’ன்னு தோணும். ரெண்டு குழந்தைகளுமே டக், டக்னு பண்ணீட்டாங்க. எங்களை வேலை வாங்கறதுதான் டைரக்டருக்கு கஷ்டமா இருந்திருக்கும்”

”தமிழ்ல யாரைப் பிடிக்கும்?”

“இவர்கூட நடிப்பேனான்னு தெரியல. என் கைல இல்ல.. சூர்யா.  அவரை ரொம்பப் பிடிக்கும். அவர் பண்ற கேரக்டர்ஸ் எல்லாம் பிடிக்கும்”

விஜய் சேதுபதியோட அந்தக் காதல்.. சான்ஸே இல்ல! - ரம்யா நம்பீசன் பேட்டி

“டைரக்டர்ல?”

“எல்லா ஜானர்லயும் பண்ணணும்னு ஆசைப்படறதால, எல்லாரையும் பிடிக்கும். ஆனா கௌதம் வாசுதேவ் மேனன் ரொம்பப் பிடிக்கும்”

“சேதுபதில என்ன எதிர்பார்க்கலாம்”

“மதுரைல இருக்கற ஒரு போலீஸ் எப்படி இருப்பாங்கன்னு அப்டியே பண்ணீருக்கார் விஜய் சேதுபதி. அவரோட நானும் ரௌடிதான் மதுரைல பார்த்தேன். அதுல ரௌடியா எப்படி நடிச்சிருப்பாரோ.. அதுக்கு எதிர். போலீஸ் இருக்கற ஒரு ஃபேமலி ஸ்டோரிதான் இது. கண்டிப்பா உங்களுக்குப் பிடிக்கும்” 

-பரிசல் கிருஷ்ணா

விஜய்சேதுபதி பற்றி பேசிய ரம்யாவின் கலக்கல் வீடியோ!